தமிழ் சினிமாவில் இன்று வரை நம்பர் ஸ்டாராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது படங்கள் தமிழ் மட்டும் இன்றி பான் இந்தியா அளவில் படங்கள் வெளியாகி வருகிறது. அண்ணாத்த திரைப்படத்தை அடுத்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இது தற்போது மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்டு உருவாகி வருகிறது. படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதை எடுத்துக் கொண்டே வருகிறது.
நெல்சன் மற்றும் ரஜினிக்கு கடைசியாக வெளிவந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. ஆதலால் இருவருக்கும் கட்டாய வெற்றி படம் ஒன்று தேவைப்படுகிறது. ஜெய்லர் மாபெரும் வெற்றிக்காக தயாராகிக் கொண்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளதாகவும் அது அவரது கடைசி படமாகவும் இருக்கும் என தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அருணாச்சலம் படத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பின் வெளிவந்த திரைப்படம் தான் பாபா அப்போதே சினிமா விட்டு விலகப் போவதாகவும் செய்திகள் வரத் தொடங்கினேன். படையப்பா படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மனிஷா கொய்ராலா உடன் இணைந்து நடித்திருப்பார். முதலில் ஹீரோயின் காண தேடலில் இருக்கும் பொழுது இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ரஜினி இடம் மனிஷா கொய்ராலா பெயரை பரிந்துரைத்திருக்கிறார்.
அப்பொழுது மனிஷா கொய்ரவும் முதல்வன்,இந்தியன் போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தார். பின் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தாமல் பாலிவுட்டில் பிஸியாக நடிகராக வலம் வந்தார்.
பாபா பட வாய்ப்பு அவரை எட்டிய போது நீண்ட நாட்களுக்கு தமிழில் ரீ-என்ரி கொடுக்க ஒப்புக்கொண்டு உள்ளார். அந்த காலகட்டத்தில் பாபா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ரஜினி இதன் தயாரிப்பாளராக இருந்தார். தினந்தோரும் வெளிவரும் நாளிதழ் தொடங்கி வார பத்திரிக்கை வரை அனைத்திலும் இதன் எதிர்பார்ப்பு மிகத் தீவிரமாக இருந்தது. அதன் காரணமாகவே மனிஷா கொய்ராலா இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
பின்னர் படம் வெளிவந்த பிறகு இதுவரை இல்லாத அளவிற்கு தோல்வியை கண்டது. இது அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையே அளித்தது. சமீபத்திய பேட்டி ஒன்றில் ”அந்த படத்தின் தோல்வியால் தான் என்னுடைய சினிமா வாழ்க்கையே போச்சு” என்று கூறியுள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…