ரஜினி கொடுத்த ஆடியோ கேசட்!.. என் வாழ்க்கையையே மாத்திடுச்சி!..அப்படி என்ன இருந்தது அந்த கேசட்டில்?..
தென்னிந்திய சினிமாவிலேயே மதிக்கத்தக்க நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரெல்லாம் ஒரு நடிகரா என்று தூற்றிய கூட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று உலகமே போற்றும் வகையில் உன்னதமான நடிகராக வலம் வருகிறார் ரஜினிகாந்த்.
இன்று விஜய் அஜித் ரசிகர்களை ஒன்று சேர்த்து 80களில் மொத்த ரசிகர்களையும் தன்னுள் அடக்கி வைத்தவர் நம் தலைவர். நிறம் ஒரு குறையல்ல என்பதற்கு சிறந்த உதாரணமே இவர் தான். இவரை பின்பற்றி இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறை நடிகர்கள் சினிமாவிற்குள் நுழைந்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : “தளபதி 68” படம் கல்லா கட்ட அட்லி போட்ட பிளான்… இனி பேன் இந்தியாதான் டார்கெட்…
தலைவரே தலைவரே என்று தாங்கும் ஒப்பற்ற நடிகராக இருக்கும் ரஜினிக்கு முதன்மையாக இருப்பது ஆன்மீகம் தான். இது பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. ஆன்மீகத்தில் நுழைந்ததன் பின்னாடி தான் தன்னை யார் என்பதை எனக்கு அடையாளம் காட்டியது என பல மேடைகளில் ரஜினியே கூறியிருக்கிறார்.
அந்த வகையில் ரஜினியின் ஆன்மீகத்தை பின்பற்றி ஒரு வெற்றி இயக்குனராக வலம் வந்த தருணத்தை இயக்குனர் பிரவீன் காந்தி விளக்கி கூறியிருக்கிறார். பருவ வயதிலேயே சினிமாவில் நுழைந்தவர் தான் இயக்குனர் பிரவீன் காந்தி. ரட்சகன்,ஜோடி, ஸ்டார், போன்ற வெற்றிப் படங்களையும் அதன் பின் சில படங்களையும் இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க : விஜய் படத்துல என்னை மிரட்டி நடிக்க வச்சார் எஸ்.ஏ.சி!.. பொசுக்குன்னு சொல்லிப்புட்டாரே ராதாரவி…
இயக்குனர் ஆவதற்கு முன் அவர் கையில் ஒரு ஆடியோ கேசட் கிடைத்திருக்கிறது. அது ரஜினி பி.வாசுவின் அசிஸ்டெண்டுக்கு கொடுத்த ஆடியோ கேசட். ஆனால் வாங்கியவர் அப்படியே வைத்துவிட்டார். அந்த சமயத்தில் இருந்த பிரவீன் காந்தி என்ன என கேட்டு அந்த கேசட்டை தன் வீட்டில் போட்டுக் கேட்டிருக்கிறார்.
அதில் ஜேசுதாஸ் குரலில் ‘ஓம்’ என மந்திரத்தில் உச்சரிக்கும் பாடல் இருந்ததாம். இதை ரஜினி கொடுத்திருக்கிறார் என்றால் இந்த பாடலுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நினைத்து அதிலிருந்து அந்த கேசட்டை போட்டு பிரவீன் காந்தி தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டாராம். அதிலிருந்து தான் படங்களை இயக்கும் வாய்ப்புகள் வந்ததாம். அதிலிருந்தே ரஜினியின் மீது தீவிர பக்தனாக மாறிவிட்டேன் என்று கூறினார்.