எனக்கு கல்யாணம் எல்லாம் முடிந்தது… ரசிகர்களை பதற வைத்த ஹன்சிகா… பின்னணி ரகசியம் இதோ…

Published on: July 15, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் விஜய், தனுஷ், சூர்யா, என டாப் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவரது 50-வது திரைப்படமான “மஹா” திரைப்படம் வரும் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்த ஹன்ஷிகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். சில வெப் சிரியஸிலும் நடிக்க கமிட் ஆகி அதிலும் நடித்து வருகிறார். 30 வயதான இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை, இதனால் எப்போது திருமணம் செய்துகொள்வார் என அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.

hansika

இந்த நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது,  இவரிடம் நடிகை நயன்தாரா திருமணம் முடித்துவிட்டார் நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள்.? என்று  செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன்- முன்னாள் உலக அழகிக்கு 56 வயது காதலன்… டிவிட்டரில் சரமாரி கேள்வி.. வெளியான அதிரடி பதில்…

hansika motwani

சில நடிகைகளை போல கோபபடாமல் அவர் கேட்ட அந்த கேள்விக்கு மிகவும் கூலாக ” எப்போதோ எனக்கு திருமணம் முடிந்துவிட்டது. என கூறி ரசிகர்களுக்கு முதலில் ஷாக் கொடுத்துள்ளார். அதன்பிறகு விளக்கம் அளித்த அவர் ” நடிப்புத் தொழிலை ஏற்கனவே நான் திருமணம் செய்துவிட்டேன்”.

hansika

“இப்போது நடிப்பில் மட்டுமே என்னுடைய முழு கவனம் உள்ளது . விரைவில் என்னுடைய 60-வது திரைப்படமும் வெளியாகவுள்ளது. மஹா படத்தில் நான் நடித்திருப்பது 105 நிமிடங்கள்தான். படம் ரொம்ப அருமையாக வந்திருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.