என் தங்கச்சி ஸ்ரீதேவி செம பிராடு.. நான் 12 கல்யாணம் பண்ணி வெச்சேன்- பகீர் தகவலை சொன்ன வனிதா

Published On: July 27, 2023
| Posted By : prabhanjani
vanitha sridevi

அடிக்கடி எதையாவது பேசி, சர்ச்சையில் சிக்கும் நடிகை வனிதா, தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடித்துக்கொண்டிரு்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கால் பதித்துள்ளார் வனிதா.  தனது தங்கைகளையும், குடும்பத்தையும் பற்றி பல சுவாரசிய தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் நான் பங்கேற்க வில்லை என்றால், இன்று நான் இந்த இடத்தில் இருந்திருக்கவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

vaniitha

தனது முதல் மகன் ஸ்ரீஹரி மற்றும் 2 மகள்களும் நிச்சயமாக சினிமாவுக்கு தான் வருவார்கள் என்று அடித்து கூறியுள்ளார் வனிதா. நான் காதலை பிரித்துவிடுவேன் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அப்படி எல்லாம் இல்லை. நான் இதுவரை 12 பேருக்கு திருமணம் செய்து வைத்துள்ளேன் என்று வனிதா கூறியுள்ளார். ஒரு முறை காதலர் தினத்திற்கு தன் தாயாருக்கு ஐ லவ் யூ என்று க்ரீடிங் கார்ட் கொடுத்ததாகவும், ஆனால் அது அவருக்காக வாங்கவில்லை.

அப்போது நான் காதலித்த ஒருவருக்காக வாங்கினேன். அதை என் அம்மா பார்த்துவிட்டார். உண்மையை சொன்னால், அடி விழும் என பயந்து, உங்களுக்கு தான் வாங்கினேன் என்று கூறி ஏமாற்றி தப்பித்துவிட்டேன் என்று வனிதா தெரிவித்துள்ளார்  சிறு வயதிலிருந்தே என் தாயார் மஞ்சுளா, என்னையும், என் தங்கை ப்ரீத்தாவையும் அடித்து தான் வளர்த்தார். ஆனால் மூன்றாவது தங்கையான ஸ்ரீதேவியை மட்டும் ஒருபோதும் அடித்ததே இல்லை.

sridevi vijayakumar

அதற்கு காரணம், குழந்தையிலிருந்தே ஸ்ரீதேவி மிகவும் கோவப்படுவார். ரூமுக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு, கண்ணில் பட்ட எல்லா பொருட்களையும் போட்டு உடைத்துவிடுவார். சிறு வயிதிலிருந்தே ஸ்ரீதேவி சரியான பிராடு, நல்லா டிராமா செய்து எல்லாரையும் ஏமாற்றிவிடுவார்.  அதனால், ஸ்ரீதேவியை மட்டும் யாருமே அடிக்க மாட்டார்கள் என்று அந்த பேட்டியில் வனிதா தெரிவித்துள்ளார்.