அடே இது என்னடா பித்தலாட்டமா இருக்கு... மாமா பையனுடன் தான் பிக்பாஸில் இருக்கிறாரா மைனா?
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். முதல் சீசன் துவங்கி இந்த ஆறாவது சீசன் வரை சிலரை அரவணைப்பதும், சிலரை கழுவி ஊற்றுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பிக்பாஸில் சர்ச்சை இல்லாமல் இருக்க முடியுமா? இந்த சீசனிலும் ஒரு சர்ச்சை இருக்கிறது.
தமிழின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. அசீம், அமுதவாணன், விக்ரமன் என நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இதே சீசனில் ஷிவின் மற்றும் தனலட்சுமி ஆகியோர் மக்கள் தரப்பில் இருந்து கலந்து கொண்டிருக்கின்றனர். அடிதடி, வாய் சண்டை என முதல் வாரத்தில் இருந்தே நிகழ்ச்சி கலைக்கட்டி வருகிறது.
அசீம் துவங்கி தனலட்சுமி வரை பலரும் வைரலாகி வருகின்றனர். இந்த சீசனில் முதல் வாரம் கடந்தப்பின் உள்ளே வந்தார் சின்னத்திரை நடிகை மைனா நந்தினி. பொறுமையாக தனது ஆட்டத்தினை துவங்கி இருக்கும் மைனாவின் மாமன் மகன் தான் ஏடிகே என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இன்னொரு போட்டியாளராக இருப்பவர் ஏடிகே. தினேஷ் கனகரத்தினம் என்ற தனது பெயரை ஏடிகே என சுருக்கி வைத்திருக்கும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் பாடல் பாடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.