Categories: Cinema News latest news

தொழிலதிபராக களமிறங்கிய ‘மைனா’ நந்தினி…. என்ன பிசினஸ்னு பாருங்க!

சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் ஜொலித்து வருபவர் நடிகை மைனா நந்தினி. அவர் தற்போது தொழிலதிபர் அவதாரம் எடுத்துள்ளார். அதுகுறித்து இங்கே நாம் பார்க்கலாம்.

முன்பு போல அல்லாமல் நடிகைகள் மற்றும் நடிகர்களும் ஏதாவது ஒரு தொழிலில் கால்பதித்து வெற்றிவாகை சூடி வருகின்றனர். நயன்தாரா, சினேகா என இதற்கு சமீபத்தில் ஏகப்பட்ட நடிகைகளை உதாரணமாக கூறலாம்.

அந்தவகையில் அடுத்ததாக மைனா நந்தினி என அழைக்கப்படும் நந்தினி ‘பொன்னூஞ்சல்’ என்னும் பெயரில் புடவைக்கடை தொடங்கி இருக்கிறார். இதுகுறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”சொந்தமாக பொன்னூஞ்சல் என்னும் பெயரில் தொழில் ஆரம்பித்து இருக்கிறேன்.

உங்களுடைய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றிகள். இங்கு புதுமையான கலெக்ஷன்கள் கொட்டிக் கிடக்கின்றன,” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நந்தினியின் இந்த இன்ஸ்டா பதிவினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக அறந்தாங்கி நிஷா இதேபோல ஜவுளிக்கடை ஒன்றை திறந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
manju