கருப்பி, விதவை, மலடி.. மைனாவுக்கே இந்த கதியா?.. கண்ணீர் வராத குறையாக பேசிட்டாரே!..

by Saranya M |   ( Updated:2025-04-30 09:53:48  )
மைனா
X

நந்தினி வெண்ணிலா கபடி குழு படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதையடுத்து கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர் இயக்குநர் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகிய வம்சம் படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பு கிடைத்து வெள்ளக்கார துரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

நடிகை நந்தினி விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் ரச்சிதா மகாலட்சுமியுடன் தோழி கதாப்பாத்திரத்தில் நடித்து மைனாவாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து அமுதா ஒரு ஆச்சர்யகுரி, பாண்டியன் ஸ்டோர்ஸ், அரண்மனை கிளி, சின்ன தம்பி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். பின்னர் தொடர்களில் வாய்ப்பை இழந்த நந்தினி விக்ரம், சர்தார் ஆகிய படங்களில் நடித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக நடிக்கும் வாய்ப்பையே இழந்த மைனா நந்தினி தனது ஓன் புரடக்ஸனில் அவரது இரண்டாவது கணவாரான யோகேஸ்வரன் இயக்கத்தில் லவ் ஆக்‌ஷன் ட்ராமா என்ற யூடியூப் சேனலை நடத்தி பல குறும்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் பேட்டியளித்த நந்தினி மற்றும் அவரது கணவர் யோகேஸ்வரன், அந்த சேனலில் வெளியிடும் ஒவ்வொரு சீரிஸிலும் கருப்பி, மலடி, விதவை, மொழி, தரித்திரம், மறுமணம் போன்ற பல பெயர்களால் பெண்கள் படும் கஷ்டங்களை விரிவாக எடுத்துரைத்து வருகின்றனர். அதில் எடுத்த தலைப்புகளில் கருப்பி, மலடி, விதவை, மருமணம் உள்ளிட்ட அனைத்தையும் நானும் என் வாழ்க்கையில் சந்தித்துள்ளேன் என மைனா நந்தினி கண்ணீர் விடாதக் குறையாக கூறியுள்ளார்.

சினிமாவில் சில நடிகைகள் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக்கொள்கிறார்கள். ஆனால் யோகேஷ் என்னை எந்த சூழ்நிலையிலும் கைவிட்டதில்லை. நான் சிறிதாக சோர்வடைந்தாலும் என் பின்னால் நின்று என்னைத்தட்டி கொடுத்து தோள் கொடுக்க என் கணவன் இருக்கிறான் எனக் கூறியுள்ளார்.

பெண்களுக்கு திருமணம் ஆனதும் குழந்தையைப்பற்றி கேட்பது போன்ற சில விஷயங்கள் முன்னோர்களிடம் இருந்து இன்னமும் தொடர்ந்து வருகிறது. அது அப்போது நடந்தது இப்பொழுது நடப்பதில்லை என சொல்லவில்லை இதை கொஞ்சமாவது யோசித்து பாருங்கள் பாதிக்கப்பட்டவர்களின் மனம் எவ்வளவு புண்படுமென்று என மனம் திறந்து பேசியுள்ளார் மைனா நந்தினி.

Next Story