2010 ஆம் ஆண்டு விதார்த், அமலா பால், தம்பி ராமையா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “மைனா”. இத்திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கியிருந்தார்.
இத்திரைப்படத்தின் கதை மலைகிராமத்தை மையமாக வைத்து எழுதப்பட்டதால் இயக்குனர் பிரபு சாலமன் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் லொக்கேஷனுக்காக பல நாட்கள் அலைந்திருக்கிறார். பல நாள் தேடலுக்கு பிறகு தேனி மாவட்டத்தில் உள்ள மலைகிராமமான குரங்கனியை கதைக்கு ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்.
அமலா பால் “வீரசேகரன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும் தமிழ் ரசிகர்களிடையே பரவலாக அறியப்பட்டது “மைனா” திரைப்படத்தின் மூலம் தான். அமலா பாலின் நேட்டிவிட்டிக்கு ஏற்ற முகமும் அவரின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்திழுத்தது.
“மைனா” திரைப்படத்தில் நடித்த தம்பி ராமையா சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் “மைனா” திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருதும் கிடைத்தது.
இவ்வாறு பல்வேறு சாதனைக்கு சொந்தமான “மைனா” திரைப்படத்தை தொடக்கத்தில் சினிமாத்துறையே புறக்கணித்தது என்று கூறினால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்!
அதாவது “மைனா” திரைப்படத்தை பல விநியோகஸ்தர்களும் பார்த்து விட்டு படம் சரியில்லை என வாங்க மறுத்துவிட்டார்களாம். ஒரு நாள் இயக்குனர் பிரபு சாலமன் உதயநிதி ஸ்டாலினை சென்று பார்த்திருக்கிறார். அப்போது “என்னுடைய படத்தை வந்து பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் இதனை வெளியிடுங்கள்” என கூறியிருக்கிறார்.
அதன் படி உதயநிதி ஸ்டாலினும் வந்து “மைனா” திரைப்படத்தை பார்த்திருக்கிறார். உதயநிதிக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது. அதனை தொடர்ந்து தான் அவர் ரிலீஸ் செய்ய ஒத்துக்கொண்டாராம்.
சிறந்த அங்கீகாரம் பெற்ற “மைனா” திரைப்படத்தை பலரும் ஒதுக்கியதை நினைத்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…