
Cinema News
100 பேர் முன்னாடி நிர்வாணமாக படுத்திருந்தேன்.! திகில் கிளப்பிய ஆண்ட்ரியா பட இயக்குனர்.!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார் இயக்குனர் மிஷ்கின். அதுவே அவரது அடையாளமாகவும் மாறிப்போனது. தரமான கதைகளை எடுத்து அதனை தனது திரை பாணியில் படமாக்கி முழுக்க முழுக்க இது இயக்குனர் மிஷ்கின் திரைப்படம் என கூறும் அளவுக்கு தனது முத்திரையை தமிழ் சினிமாவில் பதித்து விட்டார் இயக்குனர் மிஷ்கின்.
இவர் இயக்கத்தில் மட்டுமல்ல நடிப்பில் தான் திறமைசாலி என்பதை தனது நடிப்பின் மூலம் நிரூபித்து வருகிறார். இவர் நடித்து இயக்கி வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்திருந்த திரைப்படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். இந்த படத்தில் மிஷ்கின் மற்றும் ஸ்ரீ ஆகியோர் நடித்து இருந்தனர்.
இதில் ஒரு காட்சியில் மிஷ்கின் நிர்வாணமாக நடித்தாராம். அந்த காட்சி பற்றி அண்மையில் ஒரு பேட்டியில் விவரித்து இருந்தார். சுமார் 100 பேர் முன்னிலையில் நான் நிர்வாணமாக நடித்து இருந்தேன். அப்போது எனக்குள் நிறைய எண்ணங்கள் தோன்றியது. ஒரு வேளை தான் இறந்து விட்டால் இப்படித்தான் தனது சடலம் இருக்கும் என நினைத்துள்ளார். இவ்வாறு கூறியுள்ளார். ஆனால் , அந்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை.
இதையும் படியுங்களேன் – இப்படி செய்யலாமா நீங்க.? அடம்பிடிக்கும் கமல்.! விழிபிதுங்கி நிற்கும் ‘விக்ரம்’ படக்குழு.!
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் பிசாசு 2. இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக அவரே அண்மையில் ஒரு பேட்டியில் கூறி வருகிறார்.