100 வருஷத்துல ஒரு சிறந்த படம்... புது படத்தை பாராட்டிய மிஷ்கின்....

by சிவா |   ( Updated:2022-02-16 09:44:46  )
myskin
X

காக்க முட்டை படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மணிகண்டன். அடுத்து விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய ஆண்டவன் கட்டளை படமும் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

அதன்பின் அவர் இயக்கிய திரைப்படம்தான் கடைசி விவசாயி. இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. விவசாயிகளின் மனநிலை, அவர்களின் வாழ்க்கை தரம் என அனைத்தையும் அழகாக இப்படம் பிரபலித்துள்ளது. இப்படத்தில் ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும், இப்படத்தின் முக்கிய வேடத்தில் 80 வயது விவசாயி நடித்துள்ளார். இப்படம் வெளியாகும் முன்பே அவர் இறந்துவிட்டார்.

kadaisi vivasayi

இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குனர் மிஷ்கின் இப்படத்தை பாராட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். கடந்த 100 வருடங்களில் இப்படம் ஒரு மிகச்சிறந்த படம். இப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம் குழந்தைகளுக்கு நம் வாழ்க்கை புரியும். என் தாத்தாவை, அப்பாவை இப்படம் ஞாபகப்படுத்துகிறது. படம் மெதுவாக செல்வதாக சிலர் சொல்கிறார்கள். 80 வயது முதியவர் எல்லாவற்றையும் மெதுவாகத்தானே செய்வார்.

kadaisi

இப்படத்தை கொண்டாடவில்லை எனில் நமக்குள்தெய்வீகத்தன்மை இல்லை என்றே அர்த்தம். இயக்குனர் மணிகண்டனுக்கு விழா எடுக்க ஆசைப்படுகிறேன். விஜய் சேதுபதியை கட்டி முத்தமிட ஆசைப்படுகிறேன். இப்படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களின் காலில் விழுந்து முத்தமிட ஆசைப்படுகிறேன். என் மகள் கனடாவில் இருக்கிறார். அவரை தமிழ்நாட்டில் வந்து வாழும் படு கேட்க முடிவெடுத்துள்ளேன்’ என இப்படத்தை சிலாகித்து பேசியுள்ளார்.

Next Story