Connect with us

Cinema News

எழுதிட்டு தூக்கி போடுவேன், அத மேஞ்சிட்டு சொல்லணும்.! உங்க திமிர் பேச்சு அடங்கவே செய்யாதா.?!

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா, பிசாசு, சைக்கோ என தமிழ் சினிமாவில் தரமான திரைப்படங்களை இயக்கி நல்ல இயக்குனர் என பெயர் எடுத்துள்ளார் மிஷ்கின். மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியில் வேறு பேசும் மனிதரல்ல மிஷ்கின்.

தனக்கு என்ன தோன்றுகிறதோ அதனை அப்படியே அது எந்த மேடையாக இருந்தாலும் வெளிப்படையாக பேசிவிட்டு வருவார் இயக்குனர் மிஷ்கின். அதுவே அவருக்கு சில நேரம் எதிராக மாறிவிடும். இருந்தாலும், அதனை அவர் கண்டு கொள்வதில்லை.

அப்படித்தான் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது தன்னுடைய உதவி இயக்குனர்கள் பற்றி மிஷ்கின் பேசியிருப்பார். அவர் கூறியதாவது, ‘ நான் எப்போதும் கதை யோசிக்கும்போது உதவி இயக்குனர்களிடம் விவாதித்தது இல்லை. திரைக்கதை யோசிக்கும் போதும் அப்படி செய்தது இல்லை. நான் எழுதி முடித்துவிடுவேன். அதனை உதவி இயக்குனர்களிடம் தூக்கி போடுவேன். அவர்கள் அதனை மேய்ந்து அதில் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து என்னிடம் கூற வேண்டும்.’ என பேசியிருப்பார்.

இதையும் படியுங்களேன் – என் மகனுக்கு கூட இத நான் பண்ணல உனக்காக சொல்றேன்.! சிவாஜி கணேசன் கூறிய 3 ரகசியம் இதுதான்.!

தன்னுடன் தனக்கு உதவியாக இருக்கும் அந்த உதவி இயக்குனர்களை பற்றி மரியாதை குறைவாக மிஷ்கின் இவ்வாறு பேசியது இணையத்தில் பேசு பொருளானது. ஆனாலும், இது மிஷ்கினுக்கு வழக்கமான ஒன்றுதான். அதனால் இதனையும் அவர் பொருட்படுத்தாமல் தனது அடுத்தடுத்த பட வேலைகளில் இயங்கத்தான் போகிறார்.

உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு வெளியில் வேறு விதமாக பேசும் மனிதர்கள் மத்தியில் தனக்கு என்ன தோன்றுகிறதோ, மற்றவர்களிடம் எப்படி பழகுவோமோ அதனை அப்படியே வெளிப்படையாக பேசும் மிஷ்கின் எவ்வளவோ மேல். என சினிமா வட்டாரத்தில் சிலர் கூறி வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top