தளபதி விஜயை புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்... ஒருவேளை அப்படி இருக்குமோ?
நடிகர் விஜயை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது. அவரது எளிமையும், பணிவான பேச்சும் விஜய் ரசிகர்களை தாண்டி மற்ற ரசிகர்களும் அவரை ரசிக்க முக்கிய காரணமாக உள்ளது. ரசிகர்கள் அல்லாமல் பெரும்பாலான திரைபிரலங்களும் நடிகர் தான் பேவரைட் ஹீரோ என கூறியுள்ளனர். அந்த அளவிற்கு நடிகர் விஜய் அனைவரையும் வசீகரித்துள்ளார்.
சரி இப்போ ஏன் இதெல்லாம் சொல்றோன்னு தான யோசிக்கிறீங்க. அது வேற ஒன்னும் இல்லைங்க சமீபத்துல பிரபல இயக்குனர் ஒருவர் தளபதி விஜய் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அந்த இயக்குனர் யார் அப்படி என்ன சொல்லிருக்காருனு தான் நம்ம இப்போ பார்க்க போறோம்.
தமிழ் சினிமாவில தன்னோட மாறுபட்ட படங்கள் மூலமா தனக்கென தனி இடத்தை பிடிச்சிருக்குறவரு தான் அந்த இயக்குனர். சமீபத்தில கூட இவரோட இயக்கத்துல வெளியான சைக்கோ படம் விமர்சன ரீதியா நல்ல வரவேற்பை பெற்றது. ஆமாங்க இயக்குனர் மிஷ்கின் தான் நம்ம தளபதி விஜய் பத்தி பேசிருக்காரு.
மிஷ்கின் கூறியுள்ளதாவது, "சினிமாவில் என் கேரியர் விஜய்யின் யூத் படத்தில் இருந்துதான் தொடங்கியது. அப்போது விஜய்க்கு முதுகில் அடிபட்டாலும் அவர் சிம்ரனுடன் ஆள் தொட்ட பூபதி படத்தில் ஆடினார். அவர் ஒரு கடுமையான உழைப்பாளி. அவரைப் போல் ஒரு உழைப்பாளியை நான் பார்த்ததில்லை. அவர் இந்த உயரத்திற்கு வரக் காரணம் அவரது உழைப்புதான்" என கூறியுள்ளார்.
அது என்னமோ உண்மை தாங்க. என்னதான் விஜயோட அப்பா சந்திரசேகர் ஒரு இயக்குனரா இருந்தாலும் அவரோட அறிமுகத்துல விஜய் திரையுலகில் நுழைந்திருந்தாலும், விஜய்க்கென தனி திறமை இருப்பதால தான் இப்போ இந்த உயரத்துல அவர் இருக்காரு. நிச்சயமா இதுக்கு விஜயோட உழைப்பு ஒரு முக்கிய காரணம் தான்.
இப்போ இவர் திடீர்னு விஜய் பத்தி பேச என்ன காரணமா இருக்கும்? ஒருவேளை விஜய் கூட படம் எதாவது பண்ணுவாரோனு ரசிகர்கள் பேசிக்கிறாங்க. விஜயும் சமீபகாலமா வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடிக்கறாரு. அதுமட்டும் இல்லாம வெற்றி மாறன் கூட்டணியிலயும் நடிக்க இருக்காரு. எனவே மிஷ்கின் கூட இணைந்து ஒரு பண்ணா நல்லா இருக்கும்னு ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.