இதுதான் பிரச்சனையா..? விஷால் குறித்து பேசிய மிஷ்கின்!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவர் கடந்த 2017ல் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதையடுத்து அவருடன் இணைந்து 'துப்பறிவாளன் 2' படத்தில் நடித்து வந்தார். ஆனால், சில பல பிரச்சனைகள் காரணமாக இப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதன்பின் விஷால் இப்படத்தை பேசுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் இதுகுறித்து பேசிய விஷால், மிஷ்கின் உடன் இனி படம் பண்ணமாட்டேன். அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என கூறினார். இது சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

thupparivalan 2
பின்னர் இதுகுறித்து பேசிய மிஷ்கின், 'இந்த பிரச்சனையை அப்படியே விட்டுவிடலாம் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் விஷால் பேசி பேசியே மாட்டிக்கொள்கிறார். விஷாலின் பேட்டியை பார்த்தேன், ரெம்ப காமெடியாக இருந்தது.
நான் எந்த சூழ்நிலையில் விஷாலிடம் படம் பண்ணமாட்டேன் என்று சொன்னேன் தெரியுமா. எனது உதவியாளர்கள் சிலரை மோசமாக நடத்தி, அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தார். அதன்பின் எனது மேலாளரையும் அவ்வாறே மோசமாக நடத்தினார். இப்படியே தொடர்ந்து செய்ததால்தான் நான் படம் பண்ணமாட்டேன் என கூறினேன்.
பின்னர் விஷால் என்னிடம்வந்து நான் முக்கியமா இல்லை உதவியாளர்கள் முக்கியமா என கேட்டார். நான் எனது உதவியாளர்கள்தான் முக்கியம் எனக்கூறி வந்துவிட்டேன்' என கூறினார்.