
Cinema News
மிஷ்கினின் கடைசி கால ஆசையை பற்றி தெரியுமா.? கேட்டு ஷாக்கான ரசிகர்கள்.!
தன் திரைப்படங்கள் மூலம் தரமான கதைகளை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இயக்குனர் மிஷ்கின். இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் தரமானதாக இருந்துள்ளன.
இவர் அடுத்து எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க உள்ளார் என்ற ஆர்வம் பலருக்கும் உண்டு. தற்போது, இவர் இயக்கத்தில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.
இவரது படங்களை போல இவரது பேச்சுக்கும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். தனக்கு மனதில் பட்டதை வெளிப்படையாக அப்படியே பேசும் எண்ணமும் குணமும் கொண்டவர் மிஸ்கின். அப்படித்தான் தனது கடைசி கால ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படியுங்களேன் – அந்த விஷயத்தில் நான் கிங்குடா.! புதுசா ஒரு மேட்டரை களமிறக்கும் எஸ்.ஜே.சூர்யா.!
தற்போது, நான் மாதம் 75 ஆயிரம் வாடகை தரும் வீட்டில் இருக்கிறேன். ஆனால், இப்போது யோசிக்கிறேன் எனது கடைசி பதினைந்து ஆண்டுகாலம் ஒரு வயல்வெளியில், வயலில் வேலை செய்து மண்ணோடு மண்ணாக இருந்து சம்பாதித்து சாப்பிட்டு இருந்து சாகவேண்டும். இப்படி கட்டிடத்திற்கு நடுவே நகரத்திற்குள் மக்களை பார்த்துக்கொண்டு இருக்கவே கூடாது என்று தனது கடைசி கால ஆசையை மிகவும் உருக்கமாக வெளிப்படையாக தெரிவித்தார் இயக்குனர் மிஷ்கின்.
இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது படங்களில் மட்டும் வன்முறை ரத்தம் அதிகமாக இருக்கிறது . ஆனால், வாழ நினைக்கும் வாழ்க்கை மட்டும் வயல்வெளியோடு அமைதியாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.