சின்ன வயசுல செ*ஸ் புக் படிச்சேன் - மிஷ்கின்.! அவுங்க அம்மா என்ன செஞ்சிருக்காங்க பாருங்க..,

அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு என தனது திரைப்படங்கள் மூலம் தனித்து தெரிகிறார் இயக்குனர் மிஷ்கின். இவரை போல சிறப்பாக கதை சொல்ல ஆள் இல்லை எனும் அளவிற்கு படத்தின் கதையை ரசிகர்களுக்கு எளிதில் புரியும் படி விளக்கி விடுவார்.
பலர் வெளியுலகத்திற்கு வேறு மாதிரியும், சினிமா உலகிற்கு வேறு மாதிரியும் நடந்து கொள்வர். ஆனால், தான் எப்போதும் ஒரே மாதிரி தான் என தனது பேட்டிகளிலும் சரி, மேடை பேச்சுகளிலும் சரி ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார் இயக்குனர் மிஷ்கின்.
இவர் அண்மையில், ஒரு வீடியோவில் தான் சிறுவயதில் ஆபாச புத்தகம் படித்ததை பற்றி வெளிப்படையாக பேசி இருந்தார். அதாவது அவருக்கு 13 வயசு இருக்கும் போது, அவர் வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஆபாச புத்தகத்தை படித்தாராம். அதனை சோபாவின் இடுக்கில் வைத்துவிட்டு சென்று விடுவாராம்.
இதையும் படியுங்களேன் - ஷூட்டிங்கில் சமந்தா விபத்து - பொய்யான தகவல்.! புது புயலை கிளப்பிய 'அந்த' நபர்.!
அடுத்தநாள் வந்து பார்க்கையில், அந்த புத்தகம் மேஜை மீது வைக்கப்பட்டு அதன் மேல், ஒரு பேப்பர் வெயிட் வைத்திருந்தாராம் அவரது அம்மா. அப்போது, அவர் அம்மா மீது, மிக பெரிய மரியாதை உருவானதாம். தனது பையன் எதோ ஒன்றை புதியதாக கற்க நினைக்கிறான் என நினைத்து அதனை அப்படியே விட்டு விட்டு சென்றுவிட்டாராம். இந்த சம்பவத்தை அப்படியே மிஷ்கின் கூறியிருந்தார்.