ரஜினியின் கடைசி படம் இதுதானா?.. லோகேஷ் கனகராஜை பாராட்டி இயக்குனர் மிஷ்கின் போட்ட குண்டு!

இயக்குனர் மிஷ்கின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இணைய இருக்கும் புதிய படம் குறித்து பேசியுள்ளார்.

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜெயிலர் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் ரஜினிகாந்த் முக்கிய கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் குறித்து புதிய அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்றும், அந்த திரைப்படம் தான் ரஜினிக்கு கடைசி திரைப்படமாக இருக்கலாம். ரஜினிகாந்தே லோகேஷ் கனகராஜை அழைத்து இந்த வாய்ப்பை வழங்கி உள்ளார் என்றும் தகவல்களை மிஷ்கின் அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

 

Related Articles

Next Story