Categories: Cinema News latest news

படம் ஹிட்டு.. ரிலீஸ்க்கு முன்பே சிவகார்த்திகேயன் பட ரிசல்ட்டை சொன்ன மிஷ்கின்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படம் குறித்த தகவல்களை மிஷ்கின் பகிர்ந்துள்ளார்.

“டான்” படத்துக்கு பின்,
ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த ப்ரின்ஸ் படம் கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் கலவையான விமர்சனங்களைப் பிரின்ஸ் படம் பெற்றது.

ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக ‘மாவீரன்’ படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read


இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. படத்தின் டப்பிங் மற்றும் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் மிஷ்கின் அளித்துள்ள பேட்டியில், “மாவீரன் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகும். படம் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும். அனைத்து வித ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் மடோன் அஸ்வின் படத்தை இயக்கி வருகிறார். மாவீரன் படத்தில் லோக்கலான வில்லனாக நடித்து இருப்பதாக” மிஷ்கின் பேசியுள்ளார்.

Published by
muthu