கால்ஷீட் கொடுத்தவரையே கலாய்த்த மிஷ்கின்… வாய அடக்கி பேசுங்க டைரக்டர் சார்!..

Director Mysskin: மிஷ்கின் தமிழ் சினிமா இயக்குனர்களில் ஒருவர். இவர் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய் அறிமுகமானார். பின் அஞ்சாதே, பிசாசு, துப்பறிவாளன் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் சைக்கோ திரில்லர் படங்களாகவே இருக்கும்.
வித்தியாசமான கதைகளத்தினை உருவாக்கி இயக்குபவர் மிஷ்கின். இவர் மேல் சினிமா துறையில் பல குற்றச்சாட்டுகளும் உள்ளன. இவர் பொதுவாக யாரையுமே மதிக்கமாட்டார் எனவும், தனக்கு தேவைபட்டால் அனைவரையும் உபயோகித்து கொண்டு பின் தூக்கி வீசிவிடுவார் எனவும் பல கருத்துகள் நடமாடுகின்றன.
இதையும் வாசிங்க:ஒரே நாளில் ரஜினியை மயக்கிய லதா… காதலை சூப்பர்ஸ்டார் யார்கிட்ட முதலில் சொன்னாரு தெரியுமா..?
ஆனால் இவை அனைத்தும் உண்மையே என நிரூபிக்கும் வகையில் இவர் சினிமா வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய் அறிமுகமானவர்தான் சேரன். இவர் ஒரு சிறந்த நடிகரும் கூட. இவர் பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் ஒரு முறை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திடம் தனது படத்திற்கான கதையை சொல்லியிருக்கிறார். அப்போது ஏஜிஎஸ்க்கும் அக்கதை பிடித்துபோய் விட்டதாம். அப்போது அந்த ஒப்பந்தத்தில் சேரன் கையெழுத்திட தயாராக இருக்கும் போது தயாரிப்பாளர் ' சார்.. மிஷ்கினிடம் ஒரு அருமையான கதை இருக்கு… அது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்'… என கூறியுள்ளார்.
இதையும் வாசிங்க:மிஷ்கின் ஒரு டெவில்!.. அவனுக்கு முன்னாடி நான்லாம் ஒண்ணுமே இல்லை!.. பாராட்டிய பாலா!..
உடனே சேரனுக்கு அந்த நேரத்தில் ஒரு யோசனை தோன்றியுள்ளது. நாம் மிஷ்கினின் படத்தில் நடித்தால் என்ன?.. நமக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் எனும் எண்ணத்தில் இவரே மிஷ்கினுக்கு போன் செய்து தான் ஏஜிஎஸ் சார் ஒரு கதை இருப்பதாக கூறினார்… நான் நடித்தால் நன்றாக இருக்குமா என கேட்க மிஷ்கினும் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.
பின் அப்படி உருவான திரைப்படம்தான் யுத்தம் செய் திரைப்படம். மிஷ்கினுக்கு இப்படி ஒரு சூழ்நிலையை தானாகவே முன்வந்து வழங்கியவர் சேரன். ஆனால் மிஷ்கின் ஒரு மேடையில் சேரன் படம் பார்த்தால் நான் தூங்கிவிடுவேன் என கூறியிருந்தார். தான் படத்தில் நடித்த நடிகரையே குறை சொல்லும் மிஷ்கின் அனைவரும் உபயோகப்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடுவார் என்பதற்கு இது ஒரு சான்று. ஆனால் சேரனோ அவர் இவ்வாறு பேசுவதை கேட்டு தனக்கு சிரிப்புதான் வந்தது என பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இதையும் வாசிங்க:பீடி கேட்ட ரஜினிக்கு கிளாஸ் எடுத்த தோட்டக்காரார்!.. அதிலிருந்து சூப்பர்ஸ்டார் கத்துக்கிட்டது இதுதானாம்!…