வாய்க்கு பூட்டு போடுங்க மிஷ்கின்!.. ஏன் வாய் விடணும்?...ஏன் மன்னிப்பு கேட்கணும்!..
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மாதம் 18 ஆம் தேதி வெளிவந்த “கலகத் தலைவன்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் உதயநிதிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார்.
“கலகத் தலைவன்” திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மிஷ்கின் கலந்துகொண்டார். அப்போது மேடையில் “உதயநிதியிடம் ஒரு ஆக்சன் கதை கூறினேன். ஆனால் அவர் ராஜேஷ் மாதிரியான குட்டிச் சுவராக போன இயக்குனரிடமே போனார்” என கூறினார். மிஷ்கினின் இந்த பேச்சு இணையத்தில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. மேலும் திரை உலகத்தைச் சேர்ந்த பலரும் மிஷ்கினின் இந்த பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ராஜேஷின் உதவி இயக்குனர்கள் பலரும் இயக்குனர் சங்கத்திடம் மிஷ்கின் மேல் புகார் அளித்தார்களாம். இந்த புகாரை தொடர்ந்து மிஷ்கினை நேரிலே அழைத்து ராஜேஷிடம் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாம்.
இந்த தகவலை கேள்விப்பட்ட மிஷ்கின் உடனே இயக்குனர் ராஜேஷை தொடர்புகொண்டு அன்பை பொழிந்தபடி பேசினாராம். “தம்பி, நான் உனக்கு ஒரு அண்ணன் மாதிரி. நான் ஒரு ஆர்வத்தில் அன்று உன்னை பற்றி அப்படி கூறிவிட்டேன். இதை எல்லாமா சீரீயஸாக எடுத்துக்கொள்வது?” என கூறினாராம்.
மிஷ்கின் இவ்வாறு பேசியதை கேட்ட ராஜேஷ், தனது உதவியாளர்களிடம் “இந்த விஷயத்தை பெரிசு படுத்தவேண்டாம்” என கூறிவிட்டாராம். இந்த செய்தியை வலைப்பேச்சு அந்தணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதே மேடையில், இப்படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனியின் ஒரு திரைப்படத்தை கூட நான் பார்த்தது இல்லை என்றும் பேசினார் இயக்குனர் மிஷ்கின். மிஷ்கின் எல்லா மேடையிலும் இப்படித்தான் நாகரீகமின்றி எதாவது பேசி வருகிறார். அவர் தன் வாய்ப்பு பூட்டு போட வேண்டும் என திரையுலகில் பலரும் பேசி வருகிறார்கள்.