ஏங்க இப்படியா அல்பமா இருப்பீங்க.. சேரன் மனைவியிடம் ப்ளீஸ் சொன்ன மிஷ்கின்... அப்பையும் ஏமாத்திட்டாரு!

Mysskin: தமிழ் சினிமா இயக்குனர்களிலேயே பலமுறை விமர்சிக்கப்பட்டவர் மிஷ்கின். அதேப்போல தன்னுடன் நட்பாக இருப்பவர்களிடம் கூட உண்மையாக இருக்கவே மாட்டாராம். தனக்கான காரியத்தினை மட்டும் சாதித்துக்கொண்டு அவர்களை கழட்டி விடுவதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.

ஒருமுறை பெரிய புகழில் இருந்த சேரனை அழைத்த ஏஜிஎஸ் நிறுவனம் ஒரு படம் பண்ண கூப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் சேரன் தற்போது ட்ரெண்ட்டில் இருக்கும் மிஷ்கினை இயக்க சொல்லுங்கள். நான் வேண்டுமென்றால் நடித்து தருகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.

இதையும் வாசிங்க:பசியில் மயக்கமே வந்துட்டு!… இவங்க வண்டியில வந்து இத்தனை அசிங்கப்படணுமா?… கவுண்டமணியிடம் புலம்பிய ரஜினிகாந்த்..

இவரின் இந்த வித்தியாசமான ஐடியா நிறுவனத்துக்கு பிடித்துப்போக உடனே ஓகே சொல்லிவிட்டனர். அதன்படி உருவான படம் தான் யுத்தம் செய். இந்த படத்தின் ஆரம்ப நாட்களில் சேரன் மிஷ்கினை வீட்டுக்கு அழைத்து சென்று இருக்கிறார்.

அங்கு சேரனின் மனைவி வைத்த மீன் குழம்பை சாப்பிட்ட மிஷ்கின் ஆகாஓஹோ எனப் புகழ்ந்து தள்ளிவிட்டாராம். சேரன் மனைவியும் இப்படி பாராட்டுகிறார். நம்ம புருஷனை வைத்து படம் இயக்குகிறார் என சந்தோஷப்பட்டு இருக்கிறார். உடனே ஒருநாள் விட்டு ஒருநாள் வித விதமாக மீன் குழப்பினை செய்து சேரனிடம் கொடுத்து விடுவாராம்.

இதையும் வாசிங்க: ரஜினியுடன் இணையும் ஸ்டைலீஸ் இயக்குனர்?!.. அப்போ வேற லெவல் சம்பவம்தான் போலயே!…

ஒரு நிகழ்ச்சியில் கூட சேரனை தாறுமாறாக விமர்சித்தார். ஆனால் சேரன் மிஷ்கின் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கிறது. அது என்னைக்கும் என்னிடம் அப்படியே இருக்கும். என்னை விமர்சித்து இருந்தால் அது அவருடைய தனிப்பட்ட கருத்து எனப் பெருந்தன்மையாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story