மிஷ்கினை பாத்தாலே தெறிச்சு ஓடும் கோடம்பாக்கம்! – ‘மாவீரன்’ படத்தில் அண்ணன் செஞ்ச சம்பவம் அப்படி

Published on: July 20, 2023
mys
---Advertisement---

கோலிவுட்டின் நடிப்பு அரக்கனாக மாறிவருபவர் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின். திரில்லர் படங்களையே எடுத்து வரவேற்பை பெற்ற மிஷ்கின் சமீபகாலமாக நடிப்பின் மீது ஆர்வம் வந்து பெரும்பாலான படங்களில் ஒரு நடிகனாக தலை காட்டி வருகிறார். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய நடிகராகவும் வலம் வருகிறார்.

mys1
mys1

சமீபத்தில் வெளியான மாவீரன் படத்திலும் வில்லனாக நடித்திருக்கும் மிஷ்கின் விஜய் நடிப்பில் தயாராகி வரும் லியோ படத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்திருக்கிறார். மேடைகளில் பேசும் போது யாருக்கும் பயப்படாமல் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் மிஷ்கின்.

இதையும் படிங்க : குமுதா ஹேப்பி இல்ல அண்ணாச்சி! இப்படி ஒரு கொடிய நோயா? – எப்படி இருக்கிறார் பாருங்க நந்திதா?

சினிமா பற்றிய அறிவை அதிகம் வாய்க்கப்பெற்றவர். ஒரு ரஷ்ய கதாபாத்திரமான மிஷ்கின் என்ற பெயரைத்தான் தன் பெயராக வைத்திருக்கிறாராம். ஏராளமான ஆங்கில புத்தகங்களையும் நாவல்களையும் படிக்கக் கூடியவர். குறிப்பாக ஜேம்ஸ் பாண்ட் கதைகளை அதிகம் விரும்புவாராம்.

mys2
mys2

இந்த நிலையில் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் மிஷ்கின் செய்த அட்டூழியங்களை வலைப்பேச்சு அந்தனன் கூறினார். அதாவது சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மிஷ்கின் குறுக்கீட்டு இயக்குனரிடம் ‘சிவாவுக்கு ரெஸ்ட் கொடுப்பா, கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு வந்து நடிக்கட்டும்பா’ என்று அடிக்கடி சொல்வாராம்.

சிவகார்த்திகேயன் வேண்டாம் என்று சொன்னாலும் விடாமல் டார்ச்சர் செய்து கொண்டே இருப்பாராம். அதுமட்டுமில்லாமல் மாலை 6 மணி ஆனால் இயக்குனர் அஸ்வினை அழைத்து மீதி கதையை பற்றி விவாதிப்போம் என்று பேசிக் கொண்டே இருப்பாராம். ஒரு கட்டத்தில் கடுப்பான அஸ்வின் மாலை ஆனாலே தனது செல்போனை அணைத்து வைத்து விடுவாராம்.

mys3
mys3

இருந்தாலும் விடாமல் மிஷ்கின் அஸ்வினின் உதவியாளர்களை அழைத்து பேசிக் கொண்டே இருப்பாராம். இதனால் கடுப்பான அந்த உதவி இயக்குனர்கள் அவர்களுக்கு தெரிந்த இயக்குனர்களுக்கு போன் செய்து தயவு செய்து உங்கள் படங்களில் மிஷ்கினை போடதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம். வருகிற வாய்ப்பை தன் வாயாலேயே கெட்டு சின்னாபின்னாமாக்கிக் கொண்டிருக்கிறார் மிஷ்கின்.

இதையும் படிங்க : ரியல் ப்ளே பாயாக இருந்த டாப் 5 நடிகர்கள் – அப்பவே ஆட்டம் போட்ட ஜெமினிகணேசன்

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.