எலே எங்கள என்ன விஷாலுனு நினைச்சியா?… மிஷ்கினால் கடுப்பான தயாரிப்பாளர்கள்… வச்ச ட்விஸ்ட்டு தான் மாஸ்!

by Akhilan |   ( Updated:2023-09-20 12:02:07  )
எலே எங்கள என்ன விஷாலுனு நினைச்சியா?… மிஷ்கினால் கடுப்பான தயாரிப்பாளர்கள்… வச்ச ட்விஸ்ட்டு தான் மாஸ்!
X

Mysskin: நடிகரும், இயக்குனருமான மிஷ்கின் எப்போதுமே பலரை கலாய்த்து ஓவராக பேசியே ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொள்வதை வழக்கமாக வைத்து இருப்பவர். அப்படிப்பட்டவர் மட்டுமல்ல மிஷ்கின் இன்னும் எக்கசக்கமான சித்து வேலைகளையும் தன்னுடைய சகாக்களுக்கு செய்து இருக்கிறார்.

இயக்குனர் மிஷ்கின் எப்போதுமே அடாவடியான ஆள் தான். நட்சத்திரங்களை அசால்ட்டாக வாடா போடா என்ற ரீதியில் பேசிவிட்டு செல்வார். அப்படி இருக்கும் மிஷ்கின் தன்னுடைய பழகிய யாருக்குமே உண்மையாக இருந்தது இல்லை என்ற தகவலை திரை விமர்சகர் அந்தணன் தன்னுடைய ஒரு வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க:பிரபல இயக்குனரை கல்யாணம் செய்தாரா சாய் பல்லவி?… வைரலாகும் புகைப்படம்… அடேய்களா!

அந்தணன் பேசும்போது, மிஷ்கினின் நெருங்கிய நண்பர் விஷால். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்கும் போது தன்னுடைய சகாக்களை தன்னுடன் இணைத்து கொண்டார். அதில் மிஷ்கினும் ஒருவர். விஷாலுடன் சேர்த்து 22 பேர் அந்த தேர்தலில் போட்டி போட்டனர். ஆனால் வெற்றி பெறாத ஒரே ஆள் மிஷ்கின் தானாம்.

அவர் தோற்றதற்கு காரணம், செயற்கையாக அவர் கூட்டத்தில் பேசியது தானாம். நான் 24 மணி நேரமும் வேலை செய்றேன். இப்போதே உங்களுக்காக இருக்கேன் என பல டயலாக்குகளை அள்ளி வீசினார். இவரு இங்கையே குடி இருந்துட்டா பட வேலைகளை எல்லாம் யார் பார்க்குறது என்ற ரீதியில் அவருக்கு பலரும் ஓட்டு போடவே இல்லையாம்.

இதையும் படிங்க:லோகேஷ் வச்சா ஒன்னு… மூணை காட்டி மொத்தமாக சுருட்டிய ஆதிக்… என்னங்க பாஸ் இப்படி இறங்கிட்டீங்க?

இருந்தும் அவர் மீது ரொம்பவே பாசமான விஷால் சங்கத்தில் இல்லாத ஒரு புதிய பதவியை உருவாக்கினார். அதில் மிஷ்கினை உட்கார வைத்து அழகு பார்த்தார். ஆனால் அவருக்கே ஆப்படித்தாராம் மிஷ்கின். துப்பறிவாளன் இரண்டாம் பாகம் லண்டனில் நடந்ததாம். விடிய விடிய கூத்தடித்தவர் 12மணிக்கு ஷூட்டிங் என்பாராம்.

இதில் கடுப்பான விஷால் அந்த படத்தில் இருந்து மிஷ்கினை தூக்கினார். இனி என் வாழ்வில் மிஷ்கின் என்ற நபரே இல்லை என ஓபன் ஸ்டேட்மெண்ட்டை சொல்லினார். அப்படி அவரை நடுரோட்டில் நிறுத்தி விட்டு மிஷ்கின் இப்போ அவரை நண்பர், தம்பி எனச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால் விஷால் இனி இவர் பக்கம் திரும்பவே கூடாது என்ற முடிவில் இருக்கிறாராம்.

Next Story