போங்கடா நீங்களாம் தேவையில்ல!.. புதிய அவதாரம் எடுத்த இயக்குனர் மிஷ்கின்...

by Rohini |
mys_main_cine
X

தமிழ் சினிமாவில் சைக்கோ உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் மிஷ்கின். வித்தியாசமான கோணத்தில் கதை, திரைக்கதை அமைப்பதால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. சைக்கோ திரைப்படத்திற்கு பின் இவர் யாரை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில், பிசாசு 2 திரைப்படத்தை அவர் துவங்கினார்.

mys1_cine

பிசாசு 2 திரைப்படத்தின் கதை கிறிஸ்துவ பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும், நடிகை பூர்ணா பேயாக நடிக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.

mys2_cine

இயக்குனர் மிஷ்கின் ஒரு பேட்டியில் கூறுகையில் இப்ப உள்ள பாடல்கள் எல்லாம் கேக்குற மாதிரியா இருக்கு. கேட்டா காதுல யானை உச்சா போன மாதிரி இருக்கு. இதையும் ஆஹா, ஓஹானு பாராட்டி பாடலை ஹிட் ஆக்கி விடுகின்றனர் ரசிகர்கள் எனக் கூறினார்.

mys3_cine

மேலும் அவர் கூறுகையில் நானே இப்பொழுது மியூசிக் போட ஆரம்பிச்சுட்டேன். ஏற்கெனவே நான் எடுத்த படங்களுக்கு நானே ட்யூன் போட்டுருக்கேன். அதை நான் தான் போட்டேனு சொன்னால் என் மியூசிக் டைரக்டர்கள்
வருத்தப்படுவார்கள். அடுத்த இரண்டு படங்களுக்கு கிட்டத்தட்ட 20 பாடல்கள் கம்போஸ் பண்ணி வைச்சிருக்கேன்.ஆனால் படத்திற்கு இன்னும் பேர் கூட வைக்கல மற்றும் என் குழந்தைக்காகவும் ஒரு பாடல் பண்ணுனேன் என கூறினார். பாட்டு எந்த அளவுக்கு மிரட்ட போகுதுனு தெரியல..

Next Story