உயிருக்கும் மேலான பரிசை ரசிகருக்கு வழங்கிய மிஷ்கின்… இவருக்கு இப்படியும் ஒரு குணமா??
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழும் மிஷ்கின், தற்போது “பிசாசு 2” திரைப்படத்தை இயக்கி வருகிறார். புதுமைக்கும், வித்தியாசத்திற்கும் பெயர் போனவர் மிஷ்கின். இவரது திரைப்படங்களில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் ஒரு கதை சொல்லும். வசனங்களை விட காட்சிகளின் மூலம் தான் சொல்லவந்த விஷயத்தை உணர்ச்சிப்பூர்வமாகவும் ரசிக்கத்தக்க வகையிலும் பார்வையாளர்களுக்கு கடத்துபவர் மிஷ்கின்.
பல உதவி இயக்குனர்களுக்கு ஊக்கமளிக்கும் படைப்பாளியாக திகழ்கிறார் மிஷ்கின். எனினும் மிஷ்கின் எப்போதும் தனது ரசிகர்களிடம் கடுமையாகத்தான் நடந்துகொள்வார் என பலரும் நினைத்து வருகிறார்கள். ஆனால் மிஷ்கின் தனது ரசிகர்களிடம் மிகவும் அன்பாகவே நடந்துகொள்வார் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு சம்பவத்தை குறித்து பார்க்கலாம்.
ஒரு முறை மிஷ்கினை பேட்டி எடுக்கச் சென்ற நிருபருடன் ஒரு கேமரா மேன் உடன் சென்றாராம். அந்த கேமரா மேன் ஒரு தீவிர மிஷ்கின் ரசிகர் என தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர் மிஷ்கின் இயக்கிய “நந்தலாலா” திரைப்படத்தை பலமுறை பார்த்திருந்தாராம்.
இந்த விஷயத்தை மிஷ்கினிடம் கூறியுள்ளார் அவர். உடனே மிஷ்கின் தனக்கு நெருக்கமானவர் கொடுத்த மிகவும் விருப்பமான ஒரு பழங்கால தொலைப்பேசியை அந்த ரசிகருக்கு அன்பு பரிசாக கொடுத்தாராம். மேலும் அந்த ரசிகருடன் மிஷ்கின் பல மணிநேரம் “நந்தலாலா” திரைப்படம் குறித்து உரையாடினாராம்.
மிஷ்கினுக்கு பல வேலைகள் இருந்தும் அதை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு தனது ரசிகருடன் பல மணிநேரம் பேசினாராம். இந்த சம்பவத்தை ஒரு பிரபல யூட்யூப் சேன்னல் நிருபரான அர்ஜூன் மணிகண்டன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.