ஒரு நொடியில் பயந்த மிஷ்கின்...! பிசாசு-2வை போட்டு காட்டி சமரசம் செய்த சம்பவம்...
தமிழில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் மிஷ்கின். ஏற்கனவே பிசாசு என்கிற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ஹிட் அடித்தது. தற்போது பிசாசு-2 படத்தை மிஷ்கின் இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் ஆண்ட்ரியா பிசாசாக நடித்துள்ளார்.
மேலும், பூர்ணா, சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். மேலும்,விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் சிஜி வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றனவாம். சிஜியில் உள்ள கலைஞர்களிடம் எனக்கு இப்படிதான் கிராஃபிக்ஸ் வேண்டும் என சொல்ல அவர்களும் 3 டிசைன்களில் காட்டியுள்ளனர். ஆனால் அவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டு எதுவுமே பிடிக்க வில்லை என கூறியிருக்கிறார் மிஷ்கின்.
இதில் கடுப்பாகி போன கலைஞர்கள் டென்ஷனாகி விட்டனராம். இதையறிந்த மிஷ்கின் அவர்கள் எல்லோரையும் வரச் சொல்லி பிசாசு 2 படத்தை முழுவதுமாக போட்டுக் காட்டியுள்ளார். பிசாசு முதல் பாகம் அப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள பாசத்தை மையமாக இருக்கும். ஆனால் பிசாசு 2 அம்மாவிற்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம். படத்தை பார்த்த கலைஞர்கள் சில பேர் அழுதுவிட்டனர். அந்த அளவிற்கு நெஞ்சை தொட்டதுமாதிரியான உணர்வை ஏற்படுத்தியதாம். அதன் பிறகு இந்த படத்திற்கு ஏற்ற சிஜியை தயார் செய்ய வேலைகளை ஆரம்பித்துவிட்டனராம்.