இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனராக வலம் வருபவர். அவரது திரைப்படங்களில் கேமரா கோணத்தில் இருந்து ஜூனியர் ஆர்டிஸ்டுகளின் நடிப்பு வரை அனைத்தும் தனித்துவமாக இருக்கும். மிஷ்கின் இயக்கும் திரைப்படங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு.
நடிகர் மிஷ்கின்
மிஷ்கின் தற்போது “பிசாசு 2” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். மேலும் சமீப காலமாக பல திரைப்படங்களில் நடித்து வரும் மிஷ்கின் தற்போது சிவகார்த்திகேயனின் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். அதே போல் தற்போது விஜய்யின் “லியோ” திரைப்படத்திலும் மிஷ்கின் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின், சமீபத்தில் “டைனோசர்” என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அந்த விழாவில் தயாரிப்பாளர் போனி கபூர் உட்பட அருண் விஜய், விஜயகுமார், இயக்குனர் ரமணா போன்ற பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த மிஷ்கின், “டைனோசர்” திரைப்படத்தின் குழுவிற்கு தனது வாழ்த்துகளை கூறினார். அப்போது திடீரென, “போனி கபூர் இந்த விழாவிற்கு வருகிறார் என்று என்னிடம் சொன்னார்கள். எனக்கு போனி கபூர் என்றால் தெரியாது” என கூறினார்.
ஸ்ரீதேவியின் ஆத்மா
ஆனால் அதன் பின்பு பேசத்தொடங்கிய மிஷ்கின், “ஆனால் எனக்கு ஸ்ரீதேவியை ரிலேட் செய்துகொள்ள முடிகிறது. ஸ்ரீதேவி ஒரு மிகப்பெரிய நடிகை. இங்குள்ளவர்களை ஸ்ரீதேவியின் ஆத்மாதான் வாழ்த்தப்போகிறது. நாம் அவரை மிகவும் மிஸ் செய்கிறோம். ஸ்ரீதேவி அம்மாவுடன் பணியாற்றக்கூடிய உன்னதமான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அவரது கணவரான போனி கபூர் அமர்ந்திருக்கும் இடத்தில் நான் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெங்கு காய்ச்சலிலும் படுக்கையில் இருந்தே டைரக்ட் செய்த வெற்றிமாறன்… ஒரு வார்த்தைக்காக இப்படியா கஷ்டப்படுறது!