Connect with us
Mysskin

Cinema News

இந்த படத்தை எடுத்ததுக்கு ரொம்ப ஃபீல் பண்ணேன் – ஓப்பனாக பேசிய மிஷ்கின்… அடப்பாவமே!..

தமிழ் சினிமாவின் தனித்துவ இயக்குனராக திகழும் மிஷ்கின், “சித்திரம் பேசுதடி” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே வித்தியாசமான கதையம்சத்துடன் பார்வையாளர்களை அசரவைத்தார் மிஷ்கின்.

“சித்திரம் பேசுதடி” திரைப்படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கிய “அஞ்சாதே” திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது. “அஞ்சாதே” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர் இயக்குனராக மாறிப்போனார் மிஷ்கின்.

Mysskin

Mysskin

இத்திரைப்படத்தை தொடர்ந்து “யுத்தம் செய்”, “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “பிசாசு”, போன்ற பல திரைப்படங்களை இயக்கினார். தற்போது “தளபதி 67”, “மாவீரன்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே கடந்த 2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா, பூஜா ஹெக்டே ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “முகமூடி”. இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமாக அமைந்தது.

Mugamoodi

Mugamoodi

பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளியான இத்திரைப்படம் அவ்வளவாக ரசிகர்களை கவரவில்லை. மிஷ்கின் இயக்கிய திரைப்படங்களிலேயே மிகவும் சுமாரான வரவேற்பை பெற்ற திரைப்படமாக இது அமைந்தது. இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது தான் இயக்கிய “முகமூடி” திரைப்படத்தை குறித்து ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.

“முகமூடி படத்தை எடுத்ததற்காக நான் ஃபீல் பண்ணிருக்கேன். அதற்கு என்ன காரணம் என்றால் ஆறு மாசமாக வேறு ஒரு படத்திற்காக ஸ்கிரிப்ட் செய்துகொண்டிருந்தபோது ஒரே மாதத்தில் முகமூடி படத்தை இயக்க வேண்டிய கட்டாயம் வந்தது. ஒரு மாதம்தான் என்னால் ஸ்கிரிப்ட் செய்யமுடிந்தது.

இதையும் படிங்க: “படம் கண்டிப்பா ஃப்ளாப்தான்”… இயக்குனரே கைவிட்ட ரஜினி படம்… ஆனால் அங்கதான் டிவிஸ்ட்டே!!

Mugamoodi

Mugamoodi

நான் சூப்பர் ஹீரோ படம் எடுக்க வேண்டும் என நினைத்தபோதுதான் ஹாலிவுட்டில் கிரிஸ்டோபர் நோலன் டார்க் நைட் என்ற படத்தை கொண்டு வந்துவிட்டான். ஒரு பெரிய ரோடு இருக்கும்போது ஒரு சின்ன கோடு இருந்தா எப்படி இருக்குமோ அப்படி ஆகிவிட்டது.

ஆனால் அத்திரைப்படம் எனக்கு குருட்டுத்தனமான அனுபவம் என்றுதான் கூறுவேன். ப்ரூஸ்லியுடன் பணியாற்றிய ஒரு ஸ்டன்ட் மாஸ்டருடன் பணியாற்றக்கூடிய வாய்ப்பு இத்திரைப்படத்தின் மூலம் கிடைத்தது. மேலும் ஜீவாவோடு பணியாற்றக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது. ஜீவா ஒரு சிறந்த நடிகர்” என மிஷ்கின் அப்பேட்டியில் கூறியிருந்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top