இவ்வளவு காசு கொட்டுன்னா இனி எப்படி படம் எடுப்பாரு… மிஷ்கினுக்கு அடித்த லாட்டரியை பாருங்கப்பா!!
தமிழ் சினிமாவின் தனித்துவ இயக்குனராக திகழ்ந்து வரும் மிஷ்கின், சினிமாவை கனவாக கொண்டு வாழும் உதவி இயக்குனர்களுக்கு உத்வேகம் கொடுக்கக்கூடிய இயக்குனராக திகழ்ந்து வருகிறார்.
“சித்திரம் பேசுதடி”, “அஞ்சாதே”, “நந்தலாலா”, “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “பிசாசு”, “சைக்கோ” என மிஷ்கின் இயக்கிய பல திரைப்படங்களும் உலக சினிமாவின் தரத்திற்கு நிகரானது ஆகும்.
மிஷ்கின் தற்போது இயக்கியுள்ள “பிசாசு 2” திரைப்படம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. மேலும் மிஷ்கின், விஜய் சேதுபதியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
இதனிடையே மிஷ்கின் தற்போது சிவகார்த்திகேயனின் “மாவீரன்”, விஜய்யின் “லியோ” ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மிஷ்கின் குறித்து ஒரு சூடான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது மிஷ்கின் நடிப்புக்காக தற்போது பல பட வாய்ப்புகள் வருகின்றதாம். ஆதலால் மிகவும் பிசியான நடிகராக தற்போது மாறியுள்ளாராம் மிஷ்கின். அதே போல் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒரு நாளுக்கு 10 லட்ச ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். மேலும் அவர் 10 லட்சத்திற்கும் அதிகமாக கேட்டாலும் அவரை ஒப்பந்தம் செய்வதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களாம். இவ்வாறு மிஷ்கினை குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது.
இதையும் படிங்க: என்னது இந்த நடிகர்களுக்கெல்லாம் தமிழ் படிக்கவே தெரியாதா?… என்னப்பா சொல்றீங்க!