லோன்லியா ஃபீல் பண்றீங்களா? அங்க போங்க - மனைவியை பிரிந்து மிஷ்கின் பேசுற பேச்சா?
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார் இயக்குனர் மிஷ்கின். தான் எடுக்கும் படங்கள் பெரும்பாலும் எளிய கதைகள் காட்சி அமைப்புகளுக்காக மிகவும் பிரபலமானவர். சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் மிஷ்கின்.
இப்போது இயக்குனராக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்து வருகிறார் மிஷ்கின். அது மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டி வருகிறார். பெரும்பாலும் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனராக பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்காக அர்ப்பணித்திருக்கும் மிஷ்கின் பிசாசு, சைக்கோ, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், அஞ்சாதே போன்ற படங்களின் மூலம் ஒரு திரில்லரான இயக்குனர் என்ற பெயரையும் வாங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் அவரின் சமீபத்திய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. தொகுப்பாளர் ஒருவர் மிஷ்கினிடம் லோன்லியாக ஃபீல் பண்றவங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டார். அதற்கு பதில் அளித்த மிஸ்கின் "லோன்லி என்ற ஒரு வார்த்தை இல்லவே இல்லை. நாம் எங்கே லோன்லியாக இருக்கிறோம்? நம்மைச் சுற்றி மரங்கள், செடிகள், குருவிகளின் சத்தம் என எல்லாமே இருக்கும்போது நாம் ஏன் லோன்லியாக இருக்கிறோம் ?என நினைக்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும் கூறிய மிஸ்கின் எல்லாம் நாம் நினைப்பதில் தான் இருக்கிறது என்று கூறி அவருடைய பிளாஷ்பேக் ஒன்றை கூறினார். அதாவது அவருடைய மனைவியும் மிஷ்கினும் பிரிந்து 14 வருடங்கள் ஆகிவிட்டதாம். ஏதோ ஒரு வித கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தான் வாழ்கின்றார்களாம் .அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றதாம்.
அந்த குழந்தையிடம் தினமும் பேசும் மிஸ்கின் தன் மனைவியைப் பற்றி விசாரிப்பாராம் .சில சமயங்களில் அவர் மனைவியிடமும் பேசுவாராம் "எப்படி இருக்க நல்லா இருக்கியா" என்ற இந்த வார்த்தையை மட்டும் தான் கேட்பாராம் .அவ்வளவுதான். இதில் நான் எங்கு தனிமையாக இருக்கிறேன்? இல்லையே இல்லை. எல்லாம் நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மனநிலையை பொறுத்தே அமைகின்றது என்று கூறினார் .
அதையும் தாண்டி லோன்லியாக நினைக்கிறீர்கள் என்றால் பிச்சைக்காரனிடம் போய் பேசுங்கள். எப்படி இருக்கீங்க ?அந்த மாதிரி கேளுங்கள். அந்த தனிமை என்ற ஒரு மனநிலை உங்களை விட்டு போய்விடும் என்று மிஸ்கின் கூறினார்.
இதையும் படிங்க : ரஜினிக்கு திருப்தியே இல்லை.. மாஸ் ஹிட்டாக மாற்றிய தேவா!. அட அந்த படத்தையா சொன்னாரு!..