More
Categories: Cinema History Cinema News latest news

ராஜாவால அம்மாக்கிட்ட அடி வாங்கினேன் – சிறு வயதிலேயே மிஸ்கின் செய்த காரியம்

கோலிவுட் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை எடுக்கும் முக்கியமான இயக்குனர்களில் இயக்குனர் மிஷ்கினும் முக்கியமானவர். இயக்குனர் மிஷ்கின் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் தனியான வரவேற்பை பெறக் கூடியவை. அதிலும் அவர் இயக்கிய அஞ்சாதே, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பை பெற்றன.

சைக்கோ படத்தின் வெற்றியை தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்திற்கான வேளையில் இறங்கினார் மிஸ்கின். ஆனால் விஷாலுடன் ஏற்பட்ட சம்பள பிரச்சனையின் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. அதனை தொடர்ந்து தற்சமயம் மிஸ்கின் இயக்கி வரும் திரைப்படம் பிசாசு 2.

Advertising
Advertising

Mysskin

 

இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜா மீது அதிக அன்பு கொண்டவர் மிஸ்கின். இளையராஜாவின் இசையின் மீது இவருக்கு அதிக ஈடுபாடு உண்டு. ஒரு பேட்டியில் கூறும்போது அவரது வாழ்க்கையில் இளையராஜா பாடல்கள் எப்படி இருந்தன என விளக்கியிருந்தார்.

அவர் சிறு வயதில் கடை தெருவிற்கு செல்லும்போது முதன் முதலாக அன்னக்கிளி படத்தின் பாடலை கேட்டு அப்படியே நின்றுவிட்டார். அதுதான் அவர் முதன் முதலாக பாட்டு கேட்ட அனுபவம். அதன் பிறகு அவர் கொஞ்சம் வளர்ந்த பிறகு மிஸ்கினுக்கு பக்கத்து வீட்டில் உள்ளவர் ஒருநாள் நிழல்கள் படத்தின் பாடல் கேசட்டை வாங்கி வந்துள்ளார்.

அவரிடம் அதை கேட்டுவிட்டு தருவதாக வாங்கிய மிஸ்கின் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க அந்த பாடல்களை திரும்ப திரும்ப கேட்டுள்ளார். இதனால் அவரது அம்மா கடுப்பாகி அவரை அடித்துள்ளார். அந்த அளவு இளையராஜாவின் பாடல்கள் மீது தனக்கு ஈர்ப்பு உண்டு என கூறியுள்ளார் மிஸ்கின்.

இதையும் படிங்க: இரட்டை வேடத்தில் நடித்த ஜெமினி கணேசனை அடையாளம் தெரியாமல் விமர்சித்த பத்திரிக்கையாளர்… ஒரு சுவாரஸ்ய சம்பவம்…

Published by
Rajkumar

Recent Posts