சிம்புக்கு கதை சொன்னேன்! ஆனா? மிஷ்கின் சொன்ன தரமான சம்பவம்

Published on: July 23, 2023
mysskin copy
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு சைக்கோ திரில்லர் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின். இவர் இயக்கிய அத்தனை படங்களுக்கு பின்னாடியும் ஒரு திரில்லிங்கான சப்ஜெக்ட் இருக்கும். மேலும் கதையை மிகவும் விறுவிறுப்பாக நைட் மோடில் கொண்டு செல்வார். பார்க்கும் ரசிகர்களுக்கு அது ஒரு வித ஆர்வத்தை ஏற்படுத்தும்.

சைக்கோ, பிசாசு, துப்பறிவாளன் போன்ற தரம் வாய்ந்த படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் ஆழமாக குடிபெயர்ந்திருக்கிறார். எப்போதுமே ஒரு வித கனவோடு வாழ்பவர் மிஷ்கின். அதை அவர் பேசும் விதத்தில் இருந்தே கண்டறியலாம். மிஷ்கின் எப்போதுமே ஆங்கில எழுத்தாளர்கள், ரஷ்ய எழுத்தாளர்களின் நாவலை படித்து அறிவை பெருக்கிக் கொள்பவர்.

mysskin1
mysskin1

ஒரு ரஷ்ய கதையில் வரும் பெயரைத்தான் தனக்கு  மிஷ்கின் என வைத்துக் கொண்டாராம். அந்த அளவுக்கு நாவல் மீது பைத்தியம் கொண்டவர். மேலும் ஒரு  கதையை எழுதிவிட்டாலோ அல்லது ஒரு படத்தை பார்த்து விட்டாலோ அன்று இரவு  முழுவதும் தன் உதவியாளர்களுடன் அதை பற்றி ஆலோசனை நடத்துவாராம்.

இப்படி பண்ணியிருக்கலாம். இன்னும் கொஞ்சம் மாற்றியிருக்கலாம் என தன் சிந்தனையில் தோன்றியவற்றை பற்றி விவாதிப்பாராம். மிஷ்கின் இப்போது ஒரு இயக்குனராக மட்டுமில்லாமல் சிறந்த நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் இயக்கிய ஒரு சில படங்களிலும் நடித்திருந்தாலும் மற்றவர் இயக்கும் படங்களில் நடிப்பது என்பது சாதாரண காரியம் இல்லை.

இதையும் படிங்க : கூடவே இருந்து முதுகில் குத்திய அசோகன்! நிஜத்திலும் வில்லனாகவே இருந்திருக்காருப்பா..

ஆனால் அதை திறம்பட செய்து வருகிறார் மிஷ்கின். அதுவும் வில்லன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி வருகிறார். லியோ திரைப்படத்தில் வில்லனாக வருகிறார். சமீபத்தில் ரிலீஸான மாவீரன் படத்திலும் வில்லனாகவே தோன்றியிருந்தார். மறுபடியும் படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மிஷ்கின்.

mysskin2
mysskin2

விஜய் சேதுபதிக்காக ஒரு கதையை இப்போதுதான் எழுதி முடித்திருக்கிறாராம். ஏற்கெனவே ஒரு கதையை சிம்புவிடம் சொன்னாராம். ஆனால் சிம்புவுக்காக எழுதப்பட்டது இல்லையாம். இருந்த கதையை சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லி சிம்புவிடம் சொன்னாராம். ஆனால் தயாரிப்பாளர்கள் கிடைப்பதில் சம்பளப் பிரச்சினையில் அது செட்டே ஆகவில்லையாம். மேலும் சிம்புவும் மிகவும் பிஸியாக மாறிவிட்டார் என்றும் எனக்கும் சிம்புவுக்கும் செட்டே ஆக மாட்டேங்குது என்றும் மிஷ்கின் சொன்னார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.