தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வித்தியாசமான பாதையை அமைத்துக் கொண்டு ரணகளமாக ஓடிக்கொண்டிருக்கும் இயக்குனர் மிஸ்கின். வித்தியாசமான கோணத்தில் கதை, திரைக்கதை அமைப்பதால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு.

Also Read
இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சைக்கோ படம் முற்றிலும் யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான கதைகளமாகும். திரில்லர் கலந்த கதைகளை இயக்கி மக்களிடயே சைக்கோ இயக்குனர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

இவரின் வசனத்தில் வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகர்கள் நடிக்க படம் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் முதலில் நதியா தான் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மருத்துவமனை காட்சியில் மிஷ்கினை நதியா அறைவது போன்ற சீனை படமாக்கி கொண்டிருந்தார்களாம்.

அந்த சீனில் நதியா மிஷ்கினை ஒரு நாள் முழுவதும் அறைஞ்சிருக்கிறார் சரியான ஷாட் வரவில்லை என்ற காரணத்தினால். கிட்டத்தட்ட 18 அறையாவது அடிச்சிருப்பாங்களாம். மறு நாள் காலை நதியா இந்த படத்தில் ஏதோ காரணத்தினால் நடிக்க முடியாது என்று போக ரம்யா கிருஷ்ணன் வந்தாராம். மீண்டும் அந்த காட்சியை ரம்யா கிருஷ்ணனை வைத்து படமாக்கினார்களாம். திரும்பவும் மிஷ்கின் அறை வாங்கியிருக்கிறார். மனுஷன் காதில் உய்ய்ய்னு சத்தமே வந்து விட்டதாம்.



