நல்லா ஆபாசமா நடிங்க; பாடாய்படுத்திய இயக்குனரால் கடுப்பான ரம்யா கிருஷ்ணன்: மிஷ்கின் பகிர்ந்த சீக்ரெட்

தனது 14 ஆவது வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் மிக சிறு வயதிலேயே நடிகையாக அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். அவரது முதல் படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை.

அதற்கு பிறகு நடிகர் பாண்டியனுக்கு ஜோடியாக முதல் வசந்தம் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அதனையடுத்து தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கினார் ரம்யா கிருஷ்ணன்.

ramya krishnan

ramya krishnan

மற்ற கதாநாயகிகளை போல தொடர்ந்து வெற்றிகளை கொடுத்ததில்லை என்றாலும் மக்கள் மத்தியில் பெயர் தெரியுமளவிற்கு படங்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். அவருக்கு பெரும் வரவேற்பை அளித்த படம் ரஜினியுடன் நடித்த படையப்பா படமாகும். அதன் பிறகு பெரும் ஹிட் கொடுத்த படம் பாகுபலி.

இயக்குனருடன் நடந்த பிரச்சனை:

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன். முதலில் இந்த படத்தில் வேறு கதாநாயகியைதான் நடிக்க வைத்துள்ளார் இயக்குனர்.

ramya krishnan

ramya krishnan

ஆனால் இயக்குனர் படுத்திய பாடு தாங்காமல் அந்த நடிகை பாதியிலேயே படத்தை விட்டு சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் ரம்யா கிருஷ்ணனிடம் சென்றுள்ளார் இயக்குனர். அவர் ரம்யா கிருஷ்ணனிடம் தயங்கி தயங்கியே கதையை கூறியுள்ளார். சிறிது யோசித்த ரம்யா கிருஷ்ணன் பிறகு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

ஆனால் இவர் ரம்யா கிருஷ்ணனையும் படப்பிடிப்பில் கடுமையாக வேலை வாங்கியுள்ளார். இதனால் ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பை விட்டே சென்றுவிடலாம் என முடிவெடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த மிஸ்கின் அவருக்கு ஆறுதல் கூறி படத்தில் நடிக்க வைத்துள்ளார். இதை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தேவர் மகனில் ஐஸ்வர்யா!.. கடுப்பான பாக்கியராஜ்!.. கடைசி நேரத்தில் எப்படி மாறியது தெரியுமா?

Related Articles
Next Story
Share it