உங்களை வைத்து இயக்கினால் தற்கொலைதான் பண்ணிக்கனும்- வாய்விட்ட மிஷ்கின்… கழுத்தை பிடித்த விஜய்…??

by Arun Prasad |
உங்களை வைத்து இயக்கினால் தற்கொலைதான் பண்ணிக்கனும்- வாய்விட்ட மிஷ்கின்… கழுத்தை பிடித்த விஜய்…??
X

தமிழின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் மிஷ்கின், தொடக்கத்தில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விஜய் நடித்த “யூத்” திரைப்படத்தில் மிஷ்கின் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அப்போது இருந்தே விஜய்யுடன் மிஷ்கினுக்கு நன்றாக பழக்கம் ஏற்பட்டிருந்தது.

மிஷ்கின் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் “சித்திரம் பேசுதடி”. இத்திரைப்படத்தில் நரேன், பாவனா, காதல் தண்டபாணி என பலரும் நடித்திருந்தனர். தனது முதல் திரைப்படத்திலேயே மிஷ்கின் தனது தனித்துவமான முத்திரையை சினிமாத்துறையில் பதித்துவிட்டார். அதன் பின் மிஷ்கின் தமிழ் சினிமாவின் ஒரு டிரெண்ட் செட்டராக உருவானார்.

“அஞ்சாதே”, “ஓநாயும் ஆட்டுக்குட்டியும், “பிசாசு” போன்ற பல திரைப்படங்களை இயக்கி தனது தனித்துவமான முத்திரையை தக்கவைத்துக்கொண்டார். மேலும் மிஷ்கின் சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் “சித்திரம் பேசுதடி” குறித்த ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துகொண்டார்.

அதாவது “சித்திரம் பேசுதடி” திரைப்படத்தின் கதையை முதலில் விஜய்யை மனதில் வைத்துத்தான் எழுதினாராம். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக விஜய்யிடம் கூறவில்லையாம்.

“சித்திரம் பேசுதடி” திரைப்படம் வெளிவந்தபிறகு விஜய் அத்திரைப்படத்தை பார்த்துவிட்டு மிஷ்கினிடம் “இது போல் எனக்கு ஒரு கதை சொல்லுங்கள். நாம் படம் பண்ணலாம்” என கூறியிருக்கிறார். அதற்கு மிஷ்கின் “இந்த கதையே உங்களை வைத்து இயக்குவதாக முடிவு செய்துதான் எழுதினேன்” என கூறியிருக்கிறார்.

இதனை கேட்டவுடன் விஜய் மிஷ்கினின் கழுத்தை பிடித்து “ஏன் என்னிடம் சொல்லவில்லை” என கேட்டாராம். அதற்கு மிஷ்கின் “நான் உங்களிடம் சொல்லிருப்பேன். ஆனால் உங்கள் தந்தை 18 சீன் மாற்றியிருப்பார். நீங்கள் ஒரு 18 சீன் மாற்றியிருப்பீர்கள். நான் தற்கொலையே செய்திருப்பேன். ஆதலால்தான் வேண்டாம் என்று முடிவு செய்தேன்” என கூறியிருக்கிறார்.

எனினும் “சித்திரம் பேசுதடி” திரைப்படம் இப்போதும் சினிமா ரசிகர்களிடையே பேசப்பட்டு வரும் ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story