பிரபல இயக்குனர் மிஷ்கினின் தம்பியும் ஒரு இயக்குனரா? எந்த படத்தினை இயக்கி இருக்கிறார் தெரியுமா?

by Akhilan |   ( Updated:2022-11-05 07:02:10  )
மிஷ்கின்
X

மிஷ்கின்

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பஞ்சமில்லாத இயக்குனர் என்றால் மிஷ்கின் தான். அவரின் தம்பியும் ஒரு இயக்குனர் என்ற சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் மிஷ்கின். தொடர்ச்சியாக, சித்திரம் பேசுதடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ச்சியாக யாரும் சொல்ல முடியாத கதையை கூறி ரசிகர்களிடம் வித்தியாச இயக்குனராக வலம் வருபவர். தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கி வருகிறார்.

சவரக்கத்தி

இவர் நடிப்பில் வெளியான படம் தான் சவரக்கத்தி. மிஷ்கின், ராம், பூர்ணா ஆகியோரின் அதிரடி நடிப்பில் வெளியான் படத்தினை ஜி.ஆர்.ஆதித்யா இயக்கி இருந்தார். இவர் மிஷ்கினின் உடன்பிறந்த சகோதரர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதுகுறித்து இருவரும் பெரிதாக வெளியில் கூறிக்கொண்டது இல்லை.

மிஷ்கின் - ஆதித்யா

முதலில் சித்திரம் பேசுதடி படம் வெளியான போது ஆதித்யா அவரிடம் சென்று தன்னை உதவி இயக்குனராக சேர்த்து கொள்ள கேட்டாராம். உனகெல்லாம் சினிமா என்னனு தெரியுமா எனக் கேட்டு அனுப்பி விட்டாராம். பின்னர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து கொண்டார். அதன்பிறகே ஆதித்யாவின் வளர்ச்சியை புரிந்துகொண்ட மிஷ்கின் அவரை தன்னுடன் பணியாற்ற ஓகே சொன்னாராம். சவரக்கத்தி படத்தினை தொடர்ந்து ஜி.ஆர்.ஆதித்யா இயக்கும் டெரர் படத்தின் இசையமைப்பாளர் மிஷ்கின் தான் என்பது குறிப்பிடத்தக்க சேதி.

Next Story