புஷ்பா 2 ஆடியோ லான்சில் அஜித் படத்தின் அப்டேட்!.. ஆனா?!.. தயாரிப்பாளர் வைத்த ட்விஸ்ட்!..

Published on: November 25, 2024
goodbadugly
---Advertisement---

புஷ்பா 2 ஆடியோ லான்சில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட்டை தயாரிப்பாளர் கூறியிருக்கின்றார்.

தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். அல்லு அர்ஜுனுடன் இணைந்து பகத் பாஸில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது பாகத்தை இயக்கியிருக்கின்றார் இயக்குனர் சுகுமார்.

இதையும் படிங்க: சிவா என் தம்பி மாதிரி.. எல்லா நேரத்துலயும் கூட இருப்பேன்! சிவகார்த்திகேயனுக்காக உருகிய தனுஷ்

இந்த திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட மொழிகளில் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. ஆகஸ்ட் மாதமே இப்படம் வெளியாக இருந்த நிலையில் சில பல காரணங்களால் டிசம்பர் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் ரிலீஸ் தேதிக்கு கொஞ்சம் நாட்களே இருப்பதால் படக்குழுவினர் ப்ரோமோஷன் வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் பாட்னாவில் நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்றைய தினம் சென்னையில் இப்படத்தின் கிஸ்கி பாடலை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர்கள் பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து இருந்தார்கள்.

மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரித்து இருக்கின்றது. தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தையும் இந்த நிறுவனம்தான் தயாரித்து வருகின்றது. புஷ்பா 2 ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் பலரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட்டை கேட்டு வந்தார்கள். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் அவர் படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் நடந்து வருவதாகவும் இன்னும் ஏழு நாட்களில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் முடிவடைந்து விடும் என்று கூறி இருக்கின்றார். இதையடுத்து ரிலீஸ் தேதி குறித்து பேசி அவர் அதிக முறை கூறியது போல பொங்கலுக்கு ரிலீசாக இப்படம் அதிக வாய்ப்பு இருக்கின்றது.

இதையும் படிங்க: மேடையில் அஜித் தயாரிப்பாளரிடம் சண்டைக்கு நின்ற தேவி ஸ்ரீ பிரசாத்… என்ன நடந்தது?

ஆனால் இன்று ஒரு ட்விஸ்ட்டுடன் தனது பேச்சை மாற்றிவிட்டார். இந்த படம் தங்களுக்கு முதல் தமிழ் படமாக அமைந்துள்ள நிலையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்கின்ற நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதை வைத்து பார்க்கும் போது விரைவில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.