Cinema News
பா.விஜய் எழுதிய சர்ச்சையான வரிகளை தன்னுடைய ஸ்டைலில் பயன்படுத்திய நா.முத்துக்குமார்… சென்சார் போர்டுக்கு என்னதான் ஆச்சு?
நா.முத்துக்குமார் இந்த உலகை விட்டு மறைந்தாலும் ரசிகர்களின் மனதில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். தனது தனித்துவமான பாடல் வரிகளால் என்றுமே நமது நினைவுகளில் வலம் வந்துகொண்டிருக்கிறார் நா.முத்துக்குமார்.
இவரின் பாடல் வரிகள் காலத்தை தாண்டியும் நிலைத்து நிற்கக்கூடியவை. குறிப்பாக நா.முத்துக்குமாரும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து உருவாக்கிய பாடல்கள் 90’ஸ் கிட்ஸ்களின் நினைவுகளில் என்று அழியாத இடத்தை பிடித்திருக்கிறது.
அதே போல் 90’ஸ் கிட்ஸ்களின் மிக விருப்பமான கவிஞராக திகழ்ந்தவர் பா.விஜய். தமிழ் சினிமாவில் காலத்தை தாண்டி நிற்கும் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார் பா.விஜய்.
இந்த நிலையில் பா.விஜய் புத்தரை பற்றி ஒரு பாடலில் சர்ச்சையான வரிகளை எழுதியதாகவும், அந்த வரிகளை சென்சார் போர்டு மாற்றச்சொன்னப் பிறகு அதே வரிகளை வேறு விதமாக பயன்படுத்தி நா.முத்துக்குமார் செய்த மற்றொரு தரமான சம்பவம் குறித்தும் ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
மாதவன், ஜோதிகா ஆகியோரின் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “டும் டும் டும்”. கார்த்திக் ராஜாவின் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “அத்தான் வருவாக” என்ற பாடலை பா.விஜய் எழுதியிருந்தார்.
இந்த பாடலில் “புத்தன் கூட காதலிச்சா புத்தி மாறுவானே, போதி மர உச்சியில ஊஞ்சல் ஆடுவானே” என்று சில வரிகள் இடம்பெற்றிருந்தது. இந்த வரிகள் புத்தரை அவமதிப்பது போல் இருப்பதாக கூறி சென்சார் போர்டு அந்த வரிகளை மாற்றச்சொன்னதாம். அதன் படி “சித்தன் கூட காதலிச்சா புத்தி மாறுவானே, ஆலமர உச்சியில ஊஞ்சல் ஆடுவானே” என்று வரிகளை மாற்றினார்களாம்.
இந்த வரிகளை நா.முத்துக்குமார், 2003 ஆம் ஆண்டு விக்ரம், த்ரிஷா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த “சாமி” திரைப்படத்தில் வேறு விதமாக பயன்படுத்தியிருக்கிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் “சாமி” திரைப்படத்தில் இடம்பெற்ற “அய்யய்யோ புடிச்சிருக்கு” என்ற பாடலில் “காதல் வந்து நுழைந்தால் போதி மரக்கிளையில் ஊஞ்சல் கட்டி புத்தன் ஆடுவான்” என்று சில வரிகளை பயன்படுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: படப்பிடிப்புத் தளத்தில் ஜாலியாக கோலிகுண்டு விளையாடிக்கொண்டிருந்த பிரபல இயக்குனர்… இதுக்கெல்லாம் பத்மினிதான் காரணமா??
பா.விஜய் எழுதிய அதே வரிகளை லேசாக மாற்றி நா.முத்துக்குமார் “சாமி” பட பாடலில் பயன்படுத்தியிருக்கிறார். எனினும் சென்சார் போர்டு இதனை கண்டுக்கொள்ளவில்லையாம்…