நா.முத்துக்குமார் சாகும் வரை அதை செய்யவே இல்லை!.. ஆசை நிறைவேறாமலே போன சோகம்…
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடந்த 2016ம் ஆண்டு, உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் 1999ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஏறாளமான பாடல்களை எழுதியுள்ளார். இன்று வரை இவரின் பாடல் வரிகள் நம் மனதில் நீங்காமல் உள்ளது.
காதல், சோகம், காதல் தோல்வி, மகிழ்ச்சி, வெற்றி, துக்கம் என எல்லா மனநிலைக்கும் பாடல்களை நமக்கு கொடுத்துள்ளார் நா.முத்துக்குமார். இவரின் திடீர் மறைவு, தமிழ்நாட்டையே உலுக்கியது என்று கூறலாம். இவரின் மறைவு, தமிழ்சினிமாவுக்கு ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பு என்பதில் சந்தேகமே இல்லை. நா.முத்துக்குமார் இறந்து 7 ஆண்டுகள் ஆகப்போகிறது.
ஆனால் இன்று வரை நாம் அவரின் பாடல்களை கேட்கும் போதெல்லாம், அவரை நினைத்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில் நா.முத்துக்குமார் குறித்து பல தகவல்களை எழுத்தாளரும், நடிகருமான பாவா செல்லதுறை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். நா.முத்துக்குமார் சாகும் வரை கரும்பு சாப்பிடவில்லை.
அதற்கு காரணம், சிறு வயதிலேயே அவரின் தாய் இறந்துவிட்டார். அப்போது பள்ளியில் இருந்து சிறுவனாக இருந்த நா.முத்துக்குமாரை அழைத்து வந்த போது, அவரை பார்த்த ஒருவர், சிறுவன் அழக்கூடாது என்பதற்காக கையில் வைத்திருந்த ஒரு கரும்பை கொடுத்து சாப்பிட சொல்லியிருக்கிறார்.
அந்த இனிப்பை சாப்பிட்டு, என் துயரை மறக்கடித்துவிட்டனர். தாய் இறந்த போது, நான் துயரத்தில் தான் இருந்திருக்கவேண்டும் என்று சாகும் வரை அவர் கரும்பு சாப்பிடவில்லை. நா.முத்துக்குமாருக்கு பாடலாசிரியர் ஆவதில், பெரிய நாட்டம் இல்லை. பெரிய புலவராக, கவிஞராக வேண்டும் என்று தான் ஆசை பட்டார்.
அதற்காக சில முயற்சிகளையும் அவ்அப்போது மேற்கொண்டு வந்தார். பல சினிமா பாடல்களுக்கு வரிகள் எழுதிக்கொண்டு பிசியாக இருந்ததால், இதில் கவனம் செலுத்த முடியவில்லை என்று வருத்தப்பட்டார். அவருக்கு பெரிய கவிஞர் ஆகவேண்டும் என்பது தான் லட்சியம் என்று பாவா செல்லதுறை அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க - சிகிச்சைக்கு 78 லட்சம்! நா.முத்துக்குமார் மறைவிற்கு சில நாட்கள்முன் நடந்த திக் திக் சம்பவம்..