இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சனையால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது. எனவே, வடிவேலு கடந்த 4 வருடங்களாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்போது அந்த பிரச்சனை முடிந்து வடிவேலு மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.
லைக்கா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் அவர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இப்படம் பற்றி இயக்குனர் சுராஜ் கடந்த 2 வருடங்களாக பேசி வருகிறார். ஆனால், இப்படத்தின் தலைப்பை அவர் முறையாக பதிவு செய்யவில்லை.
இதில் பிரச்சனை என்னவெனில், பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் காமெடி நடிகர் சதீஷை வைத்து ‘நாய் சேகர்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறது. மேலும், இந்த தலைப்பை முறையாக அவர்கள் பதிவும் செய்துள்ளனர்.
எனவே, வடிவேல் கோரிக்கை வைத்தும் அந்த தலைப்பு அவருக்கு கிடைக்கவில்லை.அதோடு, நாய் சேகர் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு விட்டது.
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’என்கிற தலைப்பு வைத்துள்ளனர். இது தொடர்பான போஸ்டரும் சமீபத்தில் வெளியானது. இதில் வில்லத்தனம் என்னவெனில் இதுதான் ஒரிஜினல் என சொல்வது போல் ‘ஒரிஜினல்’ என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.
ஆனால், இந்த போஸ்டர்தான் தற்போது பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது போஸ்டரில் சிம்மாசனத்தில் வடிவேல் அமர்ந்திருப்பது போலவும் அவரை சுற்றி 5 நாட்கள் நிற்பது போலவும் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த போஸ்டரில் உள்ள ஒரு நாய் உண்மையான நாயாகும். அதாவது நெட்டிசன் ஒருவர் தனது செல்ல நாயின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கான போஸ்டரை வடிவமைத்தவர் கண்ணில் அந்த புகைப்படம் பட அதை எடுத்து போஸ்டருக்கு பயன்படுத்திவிட்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சியான அந்த நாயின் உரிமையாளர் தன் அனுமதி இல்லாமல் அந்த படக்குழு தன் நாயின் புகைப்படத்தை பயன்படுத்தி விட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
போஸ்டரில் ஒரிஜினல் எனக்கூறிவிட்டு இப்படியா செய்வது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் அஜித்தின்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்…
அமரன் திரைப்படம்…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் மற்றும்…