latest news
இந்த விஷயத்துல விஜய பாராட்டியே ஆகணும்!.. இப்போ புகழ்றாரா? இல்ல திட்றாரா?..
நடிகர் விஜய்யை இந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியிருக்கின்றார்.
நடிகர் விஜய்:
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். ஒரு படத்திற்கு 200 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார். தற்போது அரசியலில் களமிறங்கி இருக்கும் நடிகர் விஜய் கடைசியாக ஹச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதையும் படிங்க: Vijay: பன்னீரில் குளிக்கிறவருக்கு சாக்கடைனா என்னனு தெரியனும்..விஜயை விமர்சித்த தயாரிப்பாளர்
அரசியல் பயணம்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக தற்போது வரை லைம்லைட்டில் இருந்து வருகின்றார் நடிகர் விஜய். இதையெல்லாம் விட்டுவிட்டு தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் களமிறங்கி இருக்கின்றார். தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் தனது கட்சியினை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கட்சியின் கொடி, பாடல் என அனைத்தையும் அறிமுகம் செய்திருந்தார்.
அதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் மிகப் பிரம்மாண்டமாக மாநாடு நிகழ்ச்சியையும் நடத்தி முடித்திருந்தார். மாநாட்டிற்கு முன்பு வரை நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்த பலரும் மாநாட்டிற்கு பிறகு அவரை எதிர்க்க தொடங்கினார்கள்.
நடிகர் விஜய் மாநாட்டில் பல கட்சிகளை தாறுமாறாக விமர்சித்து பேசியிருந்தார். அதிலும் ஆளும் திமுக கட்சிக்கு எதிராக அவர் பேசியிருந்தது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. நம் முதல் எதிரி குடும்ப அரசியல் செய்து வரும் திமுக தான் என்று மேடையில் ஓப்பனாகவே கூறிவிட்டார் நடிகர் விஜய்.
சீமான் எதிர்ப்பு:
மாநாட்டிற்கு முன்பு வரை தனது தம்பி என்று கூறிவந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். மாநாட்டிற்கு பிறகு நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்து வந்தார். நடிகர் விஜய்யின் கொள்கைகளும், சீமானின் கொள்கைகளும் ஒத்துப்போகாத காரணத்தால் அவரைக் கண்டபடி பேசி இருந்தார் சீமான். ஒன்னு ரோட்டிற்கு அந்தப் பக்கம் நில், இல்லை என்றால் ரோட்டிற்கு இந்த பக்கம் நடுவில் நின்றால் லாரி அடித்து செத்துப் போவாய், கூமுட்டை என்றெல்லாம் பேசியிருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
நடிகர் சீமானின் பேச்சு தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நடிகர் விஜயின் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருந்ததால் சமூக வலைதள பக்கங்களில் சீமானை கண்டபடி விமர்சித்து வந்தார்கள். அதனைத் தொடர்ந்து கிடைக்கும் இடங்களில் எல்லாம் சீமான் நடிகர் விஜய்யை தாக்கி பேசி வந்தார்.
இதையும் படிங்க: ரஜினியின் கூலி படத்தில் இணைந்த பிகில் பட நடிகை!.. அட இவங்களா?.. வெளியான அப்டேட்!..
விஜயை பாராட்டிய சீமான்:
இந்நிலையில் சீமான் விஜயை பாராட்டி பேசி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘விஜயால் களத்தில் நிற்க முடியாது. பிரச்சனை இருக்கிறது. அவர் களத்துக்கு போனால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டத்தை விட அவரை பார்க்க வேண்டும் என்ற கூட்டம் அதிகமாக வந்துவிடும். அந்த பிரச்சனையை வேறு சமாளிக்க வேண்டும். விஜய்க்கு நேரில் அழைத்தாவது உதவி செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கிறது. அதை நாம் பாராட்ட வேண்டும்’ என்று கூறி இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போது விஜயை புகழ்கிறாரா அல்லது திட்டுகிறாரா என்று தெரியவில்லையே எனக் கூறி வருகிறார்கள்.