பாடகர்.. 2500 கச்சேரிகளில் பாடியவர்!.. ‘நான் கடவுள்’ நடிகருக்கு இப்படி ஒரு கதை இருக்கா!...

by சிவா |   ( Updated:2023-03-15 07:02:40  )
krishna
X

krishna

திரைப்படங்களில் சில நடிகர்கள் சில காட்சிகளில் வந்து போவார்கள். அந்த படத்திற்கு அவர்களின் காட்சி வலு சேர்ப்பதாகவும் இருக்கும். ஆனால், படம் முடிந்து வெளியே போன பின் அவர்களின் ஞாபகம் ரசிகர்களுக்கு இருக்காது. அப்படத்தில் நடித்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் இயக்குனர் ஆகியோர்தான் நினைவில் இருப்பார்கள். இப்படி நினைவில் இல்லமால் போன பல நடிகர்கள் உண்டு.

naan kadavul

பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்து உருவான திரைப்படம் நான் கடவுள். இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் வில்லனாக மிரட்டியிருப்பார். பிச்சைகாரர்களின் உடல் உறுப்பை சிதைத்து அவர்களை பிச்சை எடுக்க வைப்பார். இந்த படத்தில் ஆர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்படத்தில் ஆர்யா காசியில் வாழும் அகோரியாக நடித்திருப்பார். இந்த படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் பாலாவுக்கு கிடைத்தது.

naan kadavul

இந்த படத்தில் பிச்சைக்காரர்களாக நடித்த பலரையும் பல இடங்களிலிருந்து தேர்வு செய்து நடிக்க வைத்திருப்பார் பாலா. அதில், மலை உச்சி சாமி என்கிற வேடத்தில் நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. அவர் பேச மாட்டார். எந்த அசைவும் செய்ய மாட்டார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. படம் பார்த்த ரசிகர்களுக்கு அவர் மறந்து போயிருப்பார்.

krishnamurthy

இவரின் முழுப்பெயர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இவர் ஒரு பக்தி பாடகரும் கூட. இதுவரை 2500 கச்சேரிகளில் பக்தி பாடல்களை பாடியுள்ளாராம். 50 வருடங்களுக்கு மேல் பாடி வருகிறார். நான் கடவுள் படத்தில் நடிக்கும் போது இளையராஜாவிடம் பாடுவதற்கு வாய்ப்பு கேட்டாராம். இவரால் தனியாக எங்கும் செல்ல முடியாது என்பதால் ஒருவரின் உதவியுடன் இளையராஜா ஸ்டுடியோவுக்கு சென்றாராம். இவரை பார்த்துவிட்டு ‘ஆண்டவன் மனது வைத்தால் நீங்கள் பாடலாம்’ என சொல்லிவிட்டு அனுப்பிவிட்டாராம். மாதம் 3 ஆயிரம் பென்சனில் வாழ்ந்து வரும் இவர் அரசு தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், நான் கடவுள் படத்தில் நடித்த தனக்கு சம்பளம் எதுவும் கொடிக்கவில்லை எனவும், அடுத்தடுத்த வாய்ப்புகள் வரவில்லை எனவும் கிருஷ்ணமூர்த்தி பேட்டியளித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவிற்காக மாடியிலிருந்து விழுந்த எம்ஜிஆர்!.. இது எப்ப நடந்துச்சு தெரியுமா?…

Next Story