நைட் 8 மணினா டைரக்டர் ஆப்சென்ட்.. படமுழுக்க நைட் எஃபெக்ட்! ஆனாலும் உருவான ரஜினி படம்

by Rohini |   ( Updated:2025-04-17 05:38:59  )
rajini_new
X

rajini_new

Rajini: தமிழ் சினிமாவே கொண்டாடப்படும் ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 50 வருடமாக இந்த சினிமா துறையில் கோலோச்சி வருகிறார். எத்தனையோ புதுமுக நடிகர்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் இவர்தான் டாப்பில் இருக்கிறார். இவருடைய படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் சரியாக பொருந்தக்கூடிய நடிகராகவும் ரஜினி இருந்து வருகிறார். இவருக்கு இருக்கும் ஃபேன்ஸ் வேற எந்த நடிகர்களுக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .அதனாலேயே இவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என இவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. அந்த படத்தின் மீது மக்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினி நடித்த ஒரு படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவலை ஒரு இயக்குனர் பகிர்ந்திருக்கிறார் .ரஜினி நடித்து 1985 ஆம் ஆண்டில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் நான் சிகப்பு மனிதன். இந்த படத்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கினார் .எஸ் ஏ சந்திரசேகரை பொருத்தவரைக்கும் இரவு 8 மணி ஆகிவிட்டது என்றால் அதற்கு மேல் படப்பிடிப்பை நடத்த மாட்டாராம்.

ஆனால் இந்த படத்தை பொருத்தவரைக்கும் படம் முழுக்க நைட் எஃபெக்ட் .அதனால் மவுண்டில் இரவு 11 மணிக்கு மேல் தான் படப்பிடிப்பை நடத்த அனுமதி அளித்திருக்கிறார்கள். அந்த காட்சிகளை மட்டும் துணை இயக்குனர் செந்தில்நாதன் பார்த்துக் கொண்டாராம் .அதிலிருந்து ரஜினிக்கும் செந்தில் நாதனுக்கும் இடையே நல்ல ஒரு நட்பு உருவாகி இருக்கிறது. அப்போது ரஜினி உங்களுக்கு ஏதாவது நான் செய்ய வேண்டும். ஏதாவது உதவி வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள் என சொல்லி இருந்தாராம்.

அதன் பிறகு அர்ஜுன் மற்றும் கனகா இவர்களை வைத்து செந்தில்நாதன் பெரிய இடத்துப் பிள்ளை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அந்த படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணி ரஜினியிடம் போய் கதை சொல்லுவது போல ஒரு காட்சி இருக்கும். அந்த சீனில் ரஜினியை நடிக்க வைக்க ரஜினியை பார்க்க சென்று இருக்கிறார் செந்தில்நாதன். அப்போது ரஜினி குரு சிஷ்யன் படப்பிடிப்பில் இருந்தாராம் .செந்தில் நாதனை பார்த்ததும் ரஜினி வாங்க வாங்க என அன்புடன் வரவழைத்து என்ன விஷயம் என கேட்டிருக்கிறார் .

செந்தில்நாதன் வந்த விஷயத்தை சொல்ல உடனே நாளைக்கு படப்பிடிப்பை வைத்துக் கொள்வோம் என தன்னுடைய வீட்டிற்கு வரச் சொல்லி இருக்கிறார் ரஜினி. இவர்களும் ரஜினியின் வீட்டிற்கு செல்ல அங்கு அந்த காட்சியை எடுத்து இருக்கிறார்கள். இதற்காக ரஜினி சம்பளம் என எதுவுமே வாங்கவில்லையாம். சினிமாவில் இப்படி ஒரு நல்ல மனிதனை நான் பார்த்ததே கிடையாது என செந்தில்நாதன் கூறினார். இந்த செந்தில்நாதன் வேறு யாருமில்லை. இப்போது சன் டிவியில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் லட்சுமி தொடரில் மாமனார் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் இந்த செந்தில்நாதன்.

Next Story