செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்.. ‘நானே வருவேன்’ அசத்தல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..

by சிவா |   ( Updated:2021-10-15 21:57:31  )
naane varuven
X

தனுஷை பொறுத்தவரை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த புதுப்பேட்டை, காதல் கொண்டேன் ஆகிய 2 படங்களின் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது. அடுத்து இருவரும் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

இருவருமே அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், அது ஆயிரத்தில் ஒருவன் 2 இல்லை எனவும் கூறினர். எனவே, இருவரின் கூட்டணியை ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

danush

அதன்பின் அப்படத்தின் தலைப்பு ‘நானே வருவேன்’ எனவும், தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்டு 20ம் தேதி துவங்கும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் செய்திகள் கசிந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

ஆனால், மாறன், திருச்சிற்றம்பலம் என தொடர்ந்து நடித்து வந்ததால் தனுஷால் செல்வராகவனுக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. தற்போது ஒருவழியாக அதற்கான நேரம் தனுஷுக்கு வாய்த்துள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. எனவே, கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாறன்’ படத்தில் இன்னும் சில காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளது.

naane varuven

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை செல்வராகவன் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில், Cow boy போல் தனுஷ் தலையில் தொப்பி அணிந்து, வாயில் சுருட்டு வைத்து போஸ் கொடுத்துள்ளார்.

இன்னொரு போஸ்டரில் அதே கெட்டப்பில் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த போஸ்டர்கள் தனுஷ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குவது குறிப்பிடத்தக்கது.

naane varuven

Next Story