டெரர் லுக்கில் பீதி கிளப்பும் தனுஷ்...நானே வருவேன் டீசர் வீடியோ...
by சிவா |

X
பல வருடங்களுக்கு பின் அண்ணன் செல்வராகன் இயக்கத்தில் தம்பி தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன்.
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த சில வருடங்கள் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்காத நிலையில், தனது தம்பி தனுஷுடன் செல்வராகவன் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதில், ஒரு வேடம் வழக்கம் போல் செல்வா திரைப்படங்களில் வரும் சைக்கோ கதாபாத்திரம் என்பது டீசரை பார்க்கும் போது தெரிகிறது.
இந்த டீசர் வீடியோ தனுஷ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story