More
Categories: Cinema History Cinema News latest news

14 நாள்களை விழுங்கிய நாட்டு நாட்டுப் பாடல்..! பென்டைக் கழற்றிய டான்ஸ் ஸ்டெப்கள்…!! ஒரு பார்வை

இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது நாட்டு நாட்டுப் பாடல். இந்தப் பெருமையை இந்தியாவுக்குத் தந்தவர் ராஜமௌலி. ஆர்ஆர்ஆர் படத்துக்காக வெளியான நாட்டு நாட்டுப் பாடலுக்கு இன்று ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. பாடலைப் பார்த்தால் பிரமித்துப் போவீர்கள்.

RRR

அப்படி ஒரு ஸ்டெப். ஒத்தைக் காலிலேயே போடும் ஆட்டம் நம்மை இருக்கையை விட்டு துள்ளி எழுந்து ஆடச் செய்கிறது. இப்படி ஒரு பாட்டை நமக்குத் தந்து ஆஸ்கர் விருதைப் பெறச் செய்த இயக்குனர் ராஜமௌலிக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

Advertising
Advertising

பாகுபலி இயக்குனர் அல்லவா…அந்தப் பிரம்மாண்டம் பாடலிலும் இருக்கத்தானே செய்யும்…? பாடல் முழுவதுமே நமக்குள் ஒரு பரவச உணர்வை ஏற்படுத்துகிறது. பாடலில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் இருக்கு? பாடல் உருவான விதம் எப்படி என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

நாட்டு நாட்டுப் பாடல் ஸ்ரீகர் பிரசாத் எடிட் பண்ணி இருக்கிறார். இதுபற்றி இவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

இந்தப் பாட்டுல ஒரு ஸ்டோரி இருக்கு. முதல்ல ஒரு டான்ஸ்சா தான் போகும். அப்படி இப்படி பார்த்தா கடைசியில ஒரு போட்டி வந்துடும். அதுல ஒருத்தர் தியாகம் பண்ணி விட்டுக்கொடுப்பாரு.

இதெல்லாம் எடிட் பண்ணும்போது பாட்டே பத்தல. பாட்டுக் கொஞ்சம் அதிகமாக தேவைப்பட்டது. பாட்டுல ஒரு எமோஷன் தேவைப்பட்டது. அதனால கொஞ்சம் அதிகப்படுத்தி பாட்டை எடிட் பண்ணினோம்.

அதே போல ராம் சரணும், ஜூனியர் என்டிஆரும் இந்தப் பாட்டில் டான்ஸ் ஆடி பட்டையைக் கிளப்பியிருப்பாங்க. இதுபற்றி இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

2 பேருமே டான்ஸ்ல பட்டையைக் கிளப்பியிருப்பாங்க. 14 நாள் சூட்டிங் நடந்துச்சு. காலைல 8.30 மணிக்கு ஆரம்பிச்சிடுவோம். நைட் 9.30 மணி முதல் ரிகர்சல். இது ஒரு டாஸ்கிங் எக்ஸ்பீரியன்ஸ். ரெண்டு பேருமே ஒரே மாதிரி வேகமா ஆட வேண்டியிருந்தது.

Naatu Naatu song

ரொம்ப சிரமமான விஷயம். 2 ஸ்டைலும் மிக்ஸாகி ராஜமௌலி ஸ்டைல் வரணும். பாட்டு முழுவதையும் பார்த்தா ரொம்ப பிரமிப்பான ஸ்டெப்ஸ எல்லாம் பார்க்கலாம் என்கிறார் ஜூனியர் என்டிஆர்

ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உள்பட பலரும் நடித்த படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டுப் பாடல் கோல்டன் குளோப் விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளது. இசை அமைத்தவர் கீரவாணி. பாடலை எழுதியவர் சந்திரபோஸ். இருவருக்கும் ஆஸ்கர் விருது கிடைத்தது.

Published by
sankaran v

Recent Posts