More
Categories: Cinema History Entertainment News

’விக்ரம்’ படத்தில் நான் தான் நடிக்க வேண்டியிருந்தது…! வாய்ப்பை தவற விட்டு வருத்தப்படும் பிரபலம்…!

விக்ரம் படம் வெற்றியை ஒரு பிரம்மாண்டமாக ரசிகர்களும் சரி, திரைபிரபலங்களும் சரி கொண்டாடி வருகிறார்கள். லோகேஷின் இந்த அசத்தலான உருவாக்கத்திற்கு முக்கிய பங்காக இருப்பவர்கள் நடிகர் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் சக நடிகர்கள். மேலும் அனிருத்தின் இசையில் விக்ரம் படம் கூடுதல் மெருகேற்றியிருப்பது சிறப்பு.

Advertising
Advertising

கடைசி நிமிட காட்சியில் சூர்யாவின் தோற்றம் அனைவரையும் மிரள வைத்தது. படம் முடிந்தாலும் இனிமேல் தான் ஆரம்பம் என மிரட்டுவது போல் சூர்யாவின் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் 80களில் ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை நதியா. தமிழ் சினிமாவில் கவர்ச்சியே காட்டாமல் தன் திறமையாலும் அழகாலும் மக்கள் மனதை வென்றவர். கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நடிகர்களுடன் டூயர் ஆடியுள்ளார்.

ஆனால் நடிகர் கமலுடன் இணைந்து இதுவரை ஒரு படம் கூட நடித்ததில்லை. 1986ல் வெளிவந்த விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நதியாவை தான் அணுகினார்களாம். ஆனால் அந்த நேரத்தில் ஏகப்பட்ட படங்களில் பிஸியாக நடித்ததனால் விக்ரம் படத்தில் நடிக்கமுடியவில்லை. இனிமேலாவது ஏதாவது வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் என்று கூறினார்.

Published by
Rohini

Recent Posts