Cinema History
கோடியை தாண்டி வசூல் செய்த முதல் படம்!.. அப்பவே மாஸ் காட்டிய எம்.ஜி.ஆர்!.. அட அந்த படமா?!..
இப்போதெல்லாம் கோடிகளில் வசூல் என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஜெயிலர் படம் 500 கோடி, பாகுபலி 2 திரைப்படம் 1000 கோடி, லியோ படம் 400 கோடி வசூல் என சொல்கிறார்கள். அதற்கு காரணம் இப்போது சினிமாவின் வியாபரம் என்பது பல வழிகளிலும் அதிகரித்துவிட்டது. பல கோடி கொடுத்து வாங்க ஓடிடி நிறுவனங்கள் வந்துவிட்டது.
பெரிய நடிகர்களின் படங்கள் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகிறது. இதை பேன் இண்டியா படம் என சொல்கிறார்கள். அதனால்தான் இவ்வளவு வசூலை பெரிய நடிகர்களின் படங்கள் பெறுகிறது. எனவே, தமிழ், தெலுங்கு மொழிகளின் பெரிய நடிகர்கள் தங்களின் படங்கள் பேன் இண்டியா அளவில் வெளியாவதையே விரும்புகிறார்கள். அப்படித்தான் இப்போதும் பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதையும் படிங்க: நடிக்காமல் போன அந்த நாடகம்!.. சிவாஜிக்கு அந்த பெயர் வர காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்!..
ஆனால், 50,60களில் பெரிய நடிகர்களின் சம்பளமே இரண்டு, மூன்று லட்சங்கள்தான். அன்பே வா படத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர் வாங்கிய சம்பளம் 3 லட்சம்தான். அப்போது அதிக பட்சம் 10 லட்சங்களுக்குள் மட்டுமே படத்தின் பட்ஜெட் இருக்கும். குறைவான பட்ஜெட், அதிகமான லாபம் என்பதுதான் அப்போது சினிமாவில் இருந்தது.
எம்.ஜி.ஆர் பல படங்களிலும் நடித்து சம்பாதித்த மொத்த பணத்தையும் போட்டு எடுத்த படம் நாடோடி மன்னன். அது இல்லாமல் தனது வீட்டையும் அடமானம் வைத்து பணம் வாங்கி, கடன் வாங்கி அப்படத்தை தயாரித்தார். படத்தின் பட்ஜெட் ரூ.18 லட்சம். அப்போது திரையுலகில் இருந்தவர்கள் ‘எம்.ஜி.ஆர் அதிக ரிஸ்க் எடுக்கிறார்.. இவ்வளவு பணம்போட்டு படம் தோற்றுப்போய்விட்டால் என்னாவது’ என சொன்னார்கள்.
ஆனால், எம்.ஜி.ஆருக்கு நம்பிக்கை இருந்தது. 1958ம் வருடம் வெளியான இந்த திரைப்படம் அவர் நினைத்தது மிகப்பெரிய வெற்றியை பெற்று ஒரு கோடியே பத்து லட்சம் வசூல் செய்து சாதனை படைத்தது. அதுவரை எந்த தமிழ் சினிமாவும் ஒரு கோடி வசூலை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹாலிவுட் பட வசூலை தட்டி தூக்கிய எம்.ஜி.ஆர்!.. நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன ஹாலிவுட் ஹீரோ!.