Categories: Entertainment News

புதிய பங்களா, நடிகையுடன் நைட் ஸ்டே – இரண்டாம் திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா!

நடிகர் நாக சைதன்யா நடிகையுடன் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் வாரிசு நடிகரான நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பல வருடங்களாக காதலித்து டோலிவுட் ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக இருந்து வந்தனர்.

Also Read

samantha1

ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இது தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களால் இன்னும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

சமந்தா பல படங்களில் கமிட்டாகி தன் இஷ்டம் போல் நடித்து வருகிறார். நாக சைதன்யாவும் இந்தி, தெலுங்கு பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை ஷோபிதா துலிபாலாவுடன் அடிக்கடி அவுட்டிங் சென்று வருகிறாராம் நாக சைதன்யா.

samantha1

இதையும் படியுங்கள் :நல்லா உத்து உத்து பாருங்க!…அந்த இடத்தில் ஜன்னல் வைத்து காட்டிய யாஷிகா…..

அதுமட்டுமல்லாமல் ஜூப்ளி ஹில்ஸ் என்ற பகுதியில் தான் கட்டியுள்ள புதிய பங்களாவுக்கு அடிக்கடி அவரை அழைத்து வருவதாக புகைப்படங்கள் வெளியாகி கிசுகிசுக்கப்படுகிறது.

Published by
பிரஜன்