நோயில் தவிக்கும் சமந்தா… கல்யாண மாப்பிள்ளையாகும் நாக சைதன்யா… பிரபல நடிகை கில்லாடி தானுங்கோ!

Naga Chaitanya: பிரபல ஸ்டார் ஜோடியான சமந்தா- நாக சைதன்யா விவகாரத்து செய்து பிரிந்த செய்தி பலருக்கு ஷாக்காகியது. இதில் பலருக்கும் சமந்தா மீது தான் இரக்கம் இருந்தது. அதற்கேற்ப சமந்தா நோயில் பாதிக்கப்பட்டு இருக்கிறார். சைதன்யா இன்னொரு திருமணத்துக்கு தயாராகி விட்டார்.

யா சாயா சேசாவே படத்தின் மூலம் தன்னுடன் இணைந்து நடித்த நாக சைதன்யாவை சமந்தா டேட் செய்ய தொடங்கினார். சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தவர்கள். 2017ல் இருமுறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி ரசிகர்களின் அப்ளாஸை அள்ளியது. திருமணத்துக்கு பின்னரும் சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

இதையும் படிங்க: இளையராஜா நல்லா இல்லனு சொன்னால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்… இது என்னப்பா புது உருட்டா இருக்கு!

ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் சமந்தா இறங்கி நடித்ததும், புஷ்பா பாடலுக்கு ஆடியதும் சைதன்யாவுடனான குடும்ப வாழ்க்கையில் பிரச்னையை உருவாக்கியது. ஒரு கட்டத்தில் 4 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர்.

ஜூன் 2022க்குப் பிறகு, சமந்தா சமூக ஊடகங்களில் பெரிய ப்ரேக் எடுத்தார். இதனால் அவரது உடல்நிலை குறித்து பல வதந்திகள் உருவாகியது. மேலும் அவர் அரிதான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் வந்தன. கடைசியாக அக்டோபர் 2022ல், தனக்கு டெர்மடோமயோசிடிஸ் இருப்பதாக அறிவித்தார்.

இதையும் படிங்க: கண்ணாதாசனின் பாடலை வைத்தே அவரை கலாய்த்த தேவிகா!.. வெளிவராத தகவல்!…

இந்த பக்கம் சமந்தா கஷ்டப்பட்டு வரும் நிலையில், நாக சைதன்யா படத்தில் நடித்துக்கொண்டு சக நடிகையான சோபிதா துலிபாவுடன் டேட்டங் செய்து வந்தார். இருவரும் ஒன்றாக இருப்பதாக பல செய்திகள் வெளிவந்தது. சில புகைப்படங்களும் ரிலீஸாகியது.

இந்நிலையில், சோபிதாவுக்கும் சைதன்யாவிற்கும் விரைவில் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இது பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்பதால் உடனே இவர்கள் திருமணத்தினை முடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story