பொண்ணு மாப்பிள்ளை ஜோரு!.. ஹல்தியுடன் தொடங்கிய சடங்கு!.. வைரலாகும் சைதன்யா-சோபிதா போட்டோஸ்..
நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் ஹல்தி கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா. இவரும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருந்து வருகின்றார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. பின்னர் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதையும் படிங்க: ரொம்ப பெருமையா இருக்கு!.. திடீரென விஜய் சேதுபதியை வாழ்த்திய எஸ்கே.. எதுக்கு தெரியுமா?..
விவாகரத்திற்கு பிறகு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா உடன் காதலில் இருந்து வந்தார். சோபிதாவும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டார் தரப்பிலிருந்தும் சம்மதம் தெரிவிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.
இவர்கள் இருவருமே தங்களது திருமணத்தை பிரம்மாண்டமாக செய்து கொள்வதற்கு விரும்பாத நிலையில் மிக எளிமையாக திருமண வேலைகள் நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் 4-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த சில நாட்களில் சோபிதா வீட்டில் மஞ்சள் இடிக்கும் சடங்கு நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து தற்போது ஹல்தி நிகழ்ச்சி நடந்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சோபிதாவுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி மங்களகரமாக வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் பிறகு சோபிதா நலங்கு நிகழ்ச்சிக்காக சிவப்பு நிற புடவையில் மிகவும் எளிமையாக காணப்பட்டார். நடிகர் நாக சைதன்யாவும் குர்தா பைஜாமா அணிந்திருந்தார்.
பின்னர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருவருக்கும் நலங்கு வைத்து மலர் தூவி ஆசீர்வாதம் செய்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இருவரும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார்கள். மேலும் நாக சைதன்யா மற்றும் சோபிதா திருமணத்திற்கு நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள் என மொத்தம் 300 பேர் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இதையும் படிங்க: அவரு சூர்யாவுக்கு மட்டுமில்ல!.. தமிழ் சினிமாவுக்கே ரொம்ப ஆபத்து!.. பொங்கி எழுந்த பிஸ்மி..!
சமீபத்தில் தான் அகில் அக்கினேனி நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்ற முடிந்த நிலையில் தற்போது அண்ணன் நாக சைதன்யா திருமண சடங்குகள் இனிமையாக தொடங்கியிருக்கின்றன. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் நாக சைதன்யா மற்றும் சோபிதா தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.